dinamalar telegram
Advertisement

யானைகள் பராமரிப்பு குறித்த அறிக்கை வனத்துறை உயர் அதிகாரிக்கு உத்தரவு

Share
Tamil News
சென்னை:யானைகள் பராமரிப்பு குறித்து, மாவட்ட அளவிலான குழுக்கள் நியமனம் தொடர்பாக, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் உள்ள இரண்டு யானைகளுக்கும் பாகன்கள் நியமிப்பது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகத்தில் கோவில் மற்றும் தனியார் வசம் உள்ள வளர்ப்பு யானைகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து, அறநிலையத் துறையும், வனத்துறையும் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இவ்வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. வனத்துறை சார்பில், அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுவும் முறையாக அமைக்கப்பட வில்லை; யானைகளுக்கு பாகன்கள் இல்லை; கோவில்களில் கால்நடைகள் பராமரிப்பு முறையாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:மாவட்ட அளவில் கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருப்பவர்களுக்கு, யானை பற்றி தெரியவில்லை; சில இடங்களில் குழு இயங்கவில்லை; சில இடங்களில் குழு அமைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. கோவில்களில் கால்நடைகள் பராமரிப்பு சரியாக இல்லை என்றும் புகார் கூறப்பட்டது. முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், இன்னும் அறிக்கை தாக்கல் செய்யாததால், கண்காணிப்புக் குழு அமைப்பு உள்ளிட்ட கூடுதல் விபரங்களுடன் தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement