dinamalar telegram
Advertisement

அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும்!வார்டு வாரியாக முகாம் நடத்த மக்கள் வலியுறுத்தல்

Share
Tamil News
பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகரப்பகுதிக்கு தடுப்பூசி அதிகளவு ஒதுக்கீடு செய்வதுடன், வார்டு, வார்டாக முகாம்கள் நடத்த வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், காமாட்சி நகர், வடுகபாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையங்களில், நகர மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கடந்த நான்கு நாட்களாக தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.இந்நிலையில், நேற்று இரு சுகாதார நிலையங்களுக்கு தலா, 250 கோவிஷீல்டு தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. தகவல் அறிந்த மக்கள் 'டோக்கன்' வாங்க போட்டா போட்டனர். வரிசையாக நிற்க வைத்து, ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், 'டோக்கன்' வினியோகித்தனர்.அதிகளவு வந்த மக்கள், ஊசி கிடைக்காத விரக்தியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு நடத்தி சமரசம் செய்தனர். பொதுமக்கள் கூறியதாவது: பொள்ளாச்சி பகுதியில் பல்வேறு அமைப்புகள் சார்பில், 780 ரூபாய்க்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பணம் கொடுத்து போட முடியாத ஏழைகளுக்கு தடுப்பூசி கிடைப்பது எட்டாக்கனியாக உள்ளது.நகர ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ஒதுக்கீடும் குறைவாக உள்ளது. இதனால், பல மணி நேரம் காத்திருந்து ஊசி கிடைக்காமல் திரும்பிச் செல்வது தொடர்கதையாகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வார்டு, வார்டாக தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும். அதற்கேற்ப ஊசி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.சுகாதார நிலையங்களில் ஊசி போடுபவர்களுக்கு மாத்திரை கிடைப்பதில்லை. பொதுமக்களுக்கு வினியோகிக்க மாத்திரைகள் அதிகளவு வழங்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.கிராமத்தில் ஆர்வம்பொள்ளாச்சி, ஆனைமலை ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 12 மையங்களில் நேற்று, தடுப்பூசி போடப்பட்டது. பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், சித்தேரிபாளையம், அய்யம்பாளையம், பணிக்கம்பட்டி, நெகமம் ஆகிய நான்கு மையங்களில், தடுப்பூசி போடப்பட்டது.தெற்கு ஒன்றியத்தில், கோமங்கலம்புதுார், ஜமீன் கோட்டாம்பட்டி, ரெட்டியாரூர், தென்குமாரபாளையம் ஆகிய நான்கு மையங்கள்; ஆனைமலை ஒன்றியத்தில், கிழவன்புதுார், கம்பாலபட்டி, புளியங்கண்டி, தேவிபட்டணம் ஆகிய நான்கு மையங்கள் என, 12 மையங்களில் ஊசி போடப்பட்டது.தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், பணிகளுக்கு விடுமுறை எடுத்து, அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்து ஊசி போட்டனர். ஒவ்வொரு மையத்திலும் தலா, 250 பேருக்கு என மொத்தம், 3,000 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement