dinamalar telegram
Advertisement

ஆழியாறு நீரை ஒட்டன்சத்திரம் கொண்டு செல்வதா? புதிய ஆயக்கட்டு விவசாயிகள் கண்டனம்

Share
ஆனைமலை;'ஒட்டன்சத்திரம் பகுதிக்கு பி.ஏ.பி., திட்டத்தின் ஆழியாறில் இருந்து குடிநீர் கொண்டு செல்லும் முயற்சியை கைவிட வேண்டும்,' என, ஆழியாறு புதிய ஆயக்கட்டு விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.பொள்ளாச்சி, ஆழியாறு புதிய ஆயக்கட்டு விவசாயிகள் நலச்சங்கத்தினர், ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.தீர்மானங்கள் வருமாறு:கடந்த மூன்று ஆண்டுகளாக குடிமராமத்து திட்டத்துக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டதால், கால்வாய்கள் சுத்தம் செய்யப்பட்டு, கடைமடை பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல முடிகிறது.இதேபோல், இந்தாண்டும் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். மற்ற பாசன திட்டங்களுக்கு போதிய அளவு நீர் ஒதுக்கிவிட்டு, புதிய ஆயக்கட்டுக்கு நீர் வழங்காமல், மாற்றாந்தாய் மனப்பான்மையில் செயல்படுவதை அரசு கைவிட வேண்டும். வரும் பாசன ஆண்டில் எங்களுக்கு ஒப்பந்தப்படி நீர் வழங்க வேண்டும்.காண்டூர் கால்வாய் புனரமைப்பு பணியின் போது, சர்க்கார்பதி முதல் நல்லாறு வரையிலுள்ள மலைகளிலிருந்து வரும் நீரோடைகள், காண்டூர் கால்வாய்க்கு செல்லும் வகையில் திசை திருப்பப்பட்டுள்ளது. அதை மாற்றி நீரோடைகளை இயற்கையான பாதையிலேயே விட வேண்டும்.பி.ஏ.பி., பாசன திட்டத்தில் இருந்து ஆழியாறு, திருமூர்த்தி புதிய ஆயக்கட்டு பாசன திட்டங்களுக்கு நீரை பகிர்மானம் செய்வதில், பற்றாக்குறை ஏற்படுகிறது.இந்நிலையில், பி.ஏ.பி., பாசன திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து, ஒட்டன்சத்திரம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்வதாக அறிவித்துள்ளது ஏற்புடையது அல்ல.இந்த அறிவிப்பால் பி.ஏ.பி., திட்டம் முடங்கும் நிலை ஏற்படும், ஒட்டன்சத்திரம் பகுதிக்கு பி.ஏ.பி., திட்டத்தில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் முயற்சியை கைவிட வேண்டும்.இவையுள்ளிட்ட, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement