dinamalar telegram
Advertisement

அறிவித்த நேரம் கடந்தும் மின் வெட்டால் அதிருப்தி

Share
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்ட மின் வினியோகம், அறிவித்த நேரம் கடந்தும் மாலை வரை நீடித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.பொள்ளாச்சி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி நகரம் மற்றும் வடுகபாளையம், சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, திப்பம்பட்டி, கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிபட்டி, ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ஜமீன்கோட்டாம்பட்டி, அம்பராம்பாளையம், ஜமீன் ஊத்துக்குளி மற்றும் நல்லுார் பகுதிகளில், பராமரிப்பு பணிக்காக நேற்று காலை, 10:00 முதல்மதியம், 2:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. அறிவிக்கப்பட்ட மின் தடை என்பதால், மதியம், 2:00 மணிக்கு மின் வினியோகம் இயல்பு நிலைக்கு திரும்பும் என எண்ணி, அதற்கேற்ப மக்கள் பணிகளை திட்டமிட்டிருந்தனர். ஆனால், அறிவிக்கப்பட்ட நேரம் கடந்தும் மின் வினியோகம் வரவில்லை. இறுதியாக, மாலை, 6:30 மணிக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டது. இதனால், மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு தவிப்புக்குள்ளாயினர். மின் வினியோகம் தாமதமானதால், தொழில்துறையினரும் பாதிக்கப்பட்டனர்.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'திட்டமிட்ட நேரத்துக்குள் பராமரிப்பு பணிகளை முடிக்க இயலவில்லை. மரப்பேட்டையில் ரோடு அகலப்படுத்தும் பணிக்காக மின்பாதை மாற்றியமைக்கும் பணி நடந்ததால் மின் வினியோகம் தாமதமானது.பொள்ளாச்சிக்கு மேற்கு பகுதிகளில் காற்றும், மழையும் பலமாக இருந்ததால், எதிர்பாராத விதமாக பணிகளில் தாமதம் ஏற்பட்டது,' என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement