dinamalar telegram
Advertisement

அமராவதி அணைப்பூங்கா புதுப்பிக்கப்படுமா? அரசு நிதி ஒதுக்க எதிர்பார்ப்பு

Share
Tamil News
உடுமலை;உடுமலை அருகேயுள்ள அமராவதி அணைப்பூங்காவை புதுப்பிக்க, அரசு நிதி ஒதுக்க வேண்டும்.உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, வனத்துறையின் முதலைப்பண்ணை, மலைவாழ் மக்கள் உற்பத்தி செய்த பொருட்கள் விற்பனை செய்யும், 'எக்கோ ஷாப்', வனப்பகுதி, அணைப்பூங்கா, படகு சவாரி என சுற்றுலா மையமாக உள்ளது.அணையின் கரைப்பகுதியில், 40 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பூங்கா அமைந்திருந்தது. செயற்கை நீரூற்றுக்கள், நடைபாதை, வண்ணச்செடிகள், பாரம்பரியமான மரங்கள், அவற்றின் வகைகள், இயல்புகள் குறித்த அறிவிப்பு பலகைகள், செடி, கொடிகளால் ஆன பசுமைக்குடில், அழகான இருக்கைகள், பசுமை பாலங்கள் என, பூங்கா அமைந்திருந்தது.அணையின் எதிர்புறம், 10 ஏக்கர் பரப்பளவில், சிறுவர்களுக்கான விளையாட்டுப்பூங்கா, அரிய வகை பறவைகள், 18க்கும் மேற்பட்ட வன விலங்குகள், பாம்பு வகைகள் தனித்தனி அறைகளிலும், மான் ஆகியவற்றுடன் உயிரியல் பூங்காவும் இருந்தன.பூங்காவில், சிலைகள், செடி, கொடிகளால் ஆன செயற்கை கூடாரம் என, சுற்றுலாப்பயணிகளை கவரும் ஏராளமான அம்சங்கள் இருந்தன. அணைப்பூங்கா பல ஆண்டுகளாக பராமரிக்காமல், பூங்கா முட்புதர்கள் முளைத்தும், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து ஆபத்தைஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீரூற்றுகள் மற்றும் அழங்கார மின் விளக்குகள் உடைந்தும், உயிரியல் பூங்கா முழுவதும் சிதிலமடைந்தும் காணப்படுகிறது.அணைப்பூங்காவை புதுப்பிக்க, கடந்தாண்டு திட்ட மதிப்பீடு தயாரித்து அனுப்பப்பட்டு, நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், அமராவதி அணைப்பூங்காவை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement