dinamalar telegram
Advertisement

தீவிரமாகும் பருவமழை:

Share
Tamil News
உடுமலை:நீர்பிடிப்பு பகுதிகளில், பெய்து வரும் பருவமழையால், அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது; சமவெளியில், குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. உடுமலை அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகள், கேரளா மேற்குத்தொடர்ச்சி மலையில், அமைந்துள்ளது. தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களில், அணைக்கு நீர் வரத்து கூடுதலாக கிடைக்கும்.நடப்பாண்டு, நீர் பிடிப்பு பகுதிகள் அமைந்துள்ள மறையூர் சுற்றுப்பகுதியில், தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது.இதனால், அமராவதி அணைக்கு, நீர் வரத்து அதிகரித்து, நேற்றைய காலை நிலவரப்படி, வினாடிக்கு, 1,419 கன அடி நீர் வரத்து இருந்தது; அணை நீர்மட்டம், 90 அடிக்கு, 81.43 அடியாக உள்ளது.நீர்மட்டம், 80 அடியை தாண்டியுள்ளதால், பொதுப்பணித்துறையினர், கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். திருமூர்த்தி அணைப்பகுதியில், 3 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது.சமவெளிப்பகுதியில், பருவமழை ஆங்காங்கே சாரலாக பெய்து வருவதால், சீதோஷ்ண நிலை, மாறி குளிர் காற்று வீசி வருகிறது.நேற்று காலை, 8:00 மணி வரை, பெதப்பம்பட்டியில், அதிகப்பட்சமாக, 22 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது. பருவமழை தீவிரமடைந்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement