dinamalar telegram
Advertisement

சிவப்பு கூன் வண்டு தாக்குதல் கட்டுப்படுத்த விளக்கம்

Share
திருப்புல்லாணி : ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் சிவப்பு கூன் வண்டு தாக்குதலால் தென்னை மரங்கள் பாதிப்பை தடுக்க விளக்க முகாம் நடந்தது.

திருப்புல்லாணி அருகே காஞ்சிரங்குடி கிராமத்தில் தென்னைகளில் அதிகளவுசிவப்பு கூன் வண்டு தாக்குதல் உள்ளது. இதையடுத்து வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை திட்டத்தில் வேளாண் விஞ்ஞானிகள், விரிவாக்கபணியாளர்களின் வயல்வெளி ஆய்வு விவசாயி அமீர் தோட்டத்தில் நடந்தது.குயவன்குடி வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராகவன், தஞ்சாவூர் வாடல் நோயால் தாக்கப்பட்ட தென்னந்தோப்புகளை பார்வையிட்டு தகுந்த பாதுகாப்பு முறைகளை கூறினார்.

மேலும் காண்டா மிருக வண்டு கட்டுப்பாடு, சிவப்பு கூன் வண்டு கட்டுப்பாடு குறித்து விளக்கினார். சிவப்பு கூன் வண்டு தாக்கிய மரங்களை வேரோடு அகற்ற அறிவுறுத்தினார்.பின் மா மரத்தை தாக்கும் பூச்சிகள், கட்டுப்பாட்டு முறைகளை விளக்கினார். வேளாண் உதவி இயக்குனர் அமர்லால் பேசுகையில், குரும்பை உதிர்தலை கட்டுப்படுத்த மரத்திற்கு ஒரு கிலோ தென்னை நுண்ணுாட்டம் இட வேண்டும், என்றார். ஏற்பாடுகளை வட்டார தொழில் நுட்ப மேலாளர் பானுமதி செய்திருந்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement