dinamalar telegram
Advertisement

பழங்குடியினருக்கு எட்டாக்கனியான தடுப்பூசி! செட்டில்மென்ட்களில் முகாம் நடத்த எதிர்பார்ப்பு

Share
ஆனைமலை;ஆனைமலை புலிகள் காப்பகத்திலுள்ள பழங்குடியின கிராமங்களில், தடுப்பூசி முகாம் நடத்த வேண்டுமென, மலைவாழ் மக்கள் சங்கத்தினர் சுகாதாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்தில், பொள்ளாச்சி கோட்டத்தில், வால்பாறை, மானாம்பள்ளி, பொள்ளாச்சி, டாப்சிலிப் உள்ளிட்ட வனச்சரகங்கள் உள்ளன. டாப்சிலிப் முகாம் உள்பட, 17 பழங்குடியின கிராமங்களும், ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளில், 48 பழங்குடியினர் கிராமங்களும் உள்ளன. இவற்றில், 8,200க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் உள்ளனர். இந்நிலையில், பழங்குடியின மக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்தான விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. மேலும், சொற்ப அளவிலான பழங்குடியினர் தான் தடுப்பூசி போட்டுள்ளனர்.தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் பரமசிவம் கூறியதாவது:வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, கொரோனா தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு இல்லை. சுகாதாரத்துறையினர் இதுவரை பழங்குடியினரிடம் எவ்வித விழிப்புணர்வும் ஏற்படுத்தவில்லை.அதேபோல், செட்டில்மென்ட்களில் முகாம் நடத்தப்படாததால், பழங்குடியின மக்கள் தடுப்பூசி போடாமல் உள்ளனர். போக்குவரத்து பிரச்னை இருப்பதால், மலைப்பகுதியில் இருந்து, ஊராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு வந்து தடுப்பூசி போட்டுச்செல்வதிலும் சிக்கல் ஏற்படுகிறது. இது போன்ற காரணங்களால், பழங்குடியினருக்கு தடுப்பூசி எட்டாக்கனியாகவே உள்ளது. பழங்குடியின மக்களை காக்க, செட்டில்மென்ட்கள் தோறும் சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போட வேண்டும்; விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement