dinamalar telegram
Advertisement

மார்க்கெட்டில் விலை இல்லை:நம்பிக்கை இழந்த விவசாயிகள்

Share
Tamil News
பொள்ளாச்சி;மார்க்கெட்டில் நிலையான விலை கிடைக்காததால், பொள்ளாச்சி பகுதியில், தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர்.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில், தென்னை பிரதான சாகுபடியாக உள்ளது. தென்னையில் ஊடுபயிராகவும், பாசன நிலத்தில் தனிப்பயிராகவும் தக்காளி, கத்தரிக்காய், வெண்டை, பூசணிக்காய், பச்சைமிளகாய் மற்றும் வெள்ளரி உள்ளிட்ட காய்கறி பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில், அதிகளவு மூன்று மாத பயிரான தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் சாகுபடி செய்தால், ஆண்டுதோறும் நிலையான விலை கிடைக்காமல், கால்நடைகளுக்கு உணவாக மாறும் சூழல் தான் நீடிக்கிறது.இந்தாண்டும், தக்காளிக்கு நிலையான விலை கிடைக்கும் என எதிர்பார்ப்பில் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.நேற்று முன்தினம், 15 கிலோ பெட்டி, 220 ரூபாய்; நேற்று, 250 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரம், 270 ரூபாய்க்கு விற்றது. இவ்வாறு, நிலையான விலையின்றி தினமும் மாறுபட்டுக் கொண்டே இருப்பதால், விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர்.குண்டலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தக்காளியை பறிக்காமலே செடியில் விட்டுள்ளனர். அவை, செடியிலேயே சிவந்து பழுத்து வீணாகி வருகிறது. சில இடங்களில் பறித்த தக்காளியை மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றால், ஆட்கள் கூலி மற்றும் போக்குவரத்து செலவுக்கு கூட கட்டுப்படியாகாது என்பதால், திறந்தவெளியில் கொட்டியுள்ளனர்.இந்நிலையில், தக்காளியை இருப்பு வைக்கவும், மதிப்புக்கூட்டு பொருளான தக்காளி சாஸ் தொழிற்சாலை அமைக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்பது விவசாயிகள் ஒருமித்த குரலாக உள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement