dinamalar telegram
Advertisement

நாடோடி மக்களுக்கு பட்டா

Share
சிவகங்கை : மானாமதுரையில் வசிக்கும் நாடோடி இனத்தை சேர்ந்த 25 பேருக்கு ஜாதி சான்று, வீட்டு மனை பட்டாவை கலெக்டர் மதுசூதன் ரெட்டி வழங்கி னார்.

மானாமதுரை மாரியம்மன் நகர், கங்கை அம்மன் நகர், சிங்கம்புணரி பகுதியில் கலைக்கூத்து நடத்தும் நாடோடிமக்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஜாதி சான்று கேட்டு வந்தனர். இக்கோரிக்கையை ஏற்று 25 பேர்களுக்கு தொம்ரா இனம் என்ற ஜாதி சான்று வழங்கினர். மேலும் 11 குடும்பத்தினருக்கு மானாமதுரை அருகே சன்னதி புதுக்குளத்தில் 3 சென்ட் வீட்டு மனை பட்டா வழங்கினர். சிங்கம்புணரியில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் வீட்டு மனை பட்டா வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், தாசில்தார் தமிழரசன் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement