dinamalar telegram
Advertisement

பெண் சாவில் மர்மம்: விசாரிக்க புகார் மனு

Share
உடுமலை:பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி, மெட்ராத்தியை சேர்ந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடுமலை வருவாய் கோட்டாட்சியரிடம் நேற்று மனு கொடுத்தனர்.உடுமலை அருகே மெட்ராத்தியை சேர்ந்தவர் கிருஷ்ணன். நேற்று இவரது உறவினர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டவர்கள், உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு கொடுத்தனர். மனுவில், எனது மகள் மஞ்சுளாதேவி, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன், மலையாண்டிபட்டணத்தை சேர்ந்த அன்பழகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு, 7 மாத பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், கடந்த 11ம் தேதி நள்ளிரவு, எனது மகள், இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்; அங்கு சென்று பார்த்த போது, மகள் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.புகாரின் பேரில், கணியூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மஞ்சுளாதேவி சாவில் மர்மம் இருப்பதால், விசாரணை செய்து, இச்சம்பவத்துக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். இவ்வாறு, புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement