dinamalar telegram
Advertisement

ஆக்கிரமிப்பால் மாயமாகும் மட்டிக்கண்மாய்

Share
சிங்கம்புணரி, : சிங்கம்புணரி அருகே 100 ஏக்கர் கண்மாய் ஆக்கிரமிப்பு காரணமாக மாயமாகி வருகிறது.

இத்தாலுகாவின் பெரிய கண்மாய்களில் ஒன்றான மட்டிக்கண்மாய் மட்டிக்கரப்பட்டி, குமரத்தகுடிபட்டி கிராமங்களையொட்டி அமைந்துள்ளது. சுமார் 100 ஏக்கர் பரப்பு கொண்ட இக்கண்மாய்க்கு ஆயக்கட்டாக 650 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளது. சில வருடங்களாக இக்கண்மாயின் சில பகுதிகளை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து வருகின்றனர். கட்டுமானங்களையும் கட்டியுள்ளனர்.


ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு இக்கண்மாய் சீரமைக்கப்பட்ட போது கூட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனால் கண்மாயில் தண்ணீர் தேங்கும் பரப்பு குறைந்து வருகிறது. இதனால் வருங்காலத்தில் இக்கண்மாயை நம்பியுள்ள விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே கண்மாயை முழுமையாக சர்வே செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆயக்கட்டு பாசனதாரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement