dinamalar telegram
Advertisement

குடியிருப்புக்கு தண்ணீர் கோரி பரமக்குடியில்  திருநங்கைகள் மறியல்

Share
பரமக்குடி : பரமக்குடி நான்கு வழிச்சாலையில் காலி குடங்களுடன் திருநங்கைகள் மறியலில் ஈடுபட்டனர்.

பரமக்குடி அருகே லீலாவதி நகரில் திருநங்கைகள் குடியிருப்பு உள்ளது. இங்கு 30 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தொடர்ந்து 3 மாதங்களாக குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்து வந்தனர்.இதனையடுத்து மதுரை -ராமநாதபுரம் நான்கு வழிச்சாலையில் நேற்று காலை திடீரென காலி குடங்களுடன் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.15 நிமிடங்களுக்கும் மேலாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வருவாய்த்துறை, போலீசார் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து திருநங்கைகள் கலைந்து சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement