dinamalar telegram
Advertisement

அரசு கலைக்கல்லுாரியில் வரும், 26ல் சேர்க்கை துவக்கம்

Share
வால்பாறை:வால்பாறை அரசு கலைக்கல்லுாரியில், வரும், 26ம் தேதி முதல் 'ஆன்லைன்' வாயிலாக மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2021-22ம் ஆண்டிற்கான, இளங்கலை மாணவர்கள் சேர்க்கை, வரும், 26ம் தேதி துவங்குகிறது. கல்லுாரியில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ் உள்ளிட்ட, ஒன்பது பாடப்பிரிவுகளில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 'ஆன்லைன்' வாயிலாக விரும்பிய பாடப்பிரிவில் சேர்ந்து படிக்க விண்ணப்பிக்கலாம்.கல்லுாரி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '2021-22ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விபரங்களுக்கு, 70922 64114 என்ற மொபைல்போன் எண்ணில், காலை, 8:00 முதல் இரவு, 8:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். பாடங்கள் தேர்வு குறித்த சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement