dinamalar telegram
Advertisement

எதிர்பார்ப்பு! மாவட்டத்தில் அனைவருக்கும் காவிரி குடிநீர் எப்போது?

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட மக்கள் அனைவருக்கும் காவிரி குடிநீர் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் 'தண்ணியில்லா காடு' என கூறப்பட்டு வந்தது. இதை மாற்ற 1996--99ல் ஆசியாவில் பெரிய நரிப்பையூர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் பராமரிப்பின்றி திட்டம் பயன்பாடின்றி போனது. தற்போதைய நிலையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் தான் மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கிறது. இந்த திட்டமும் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களையும் சென்றடையவில்லை.

கமுதி, முதுகுளத்துார் பகுதியில் 150க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் சில பகுதிகளில் மட்டுமே காவிரி குடிநீர் கிடைக்கிறது. பத்தாண்டுகளாக பராமரிப்பு பணிகள் செய்யாததால் பல இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது.இதனால், ஏற்கனவே குடிநீர் கிடைத்த 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் கிடைக்கவில்லை.

டேங்கர் லாரி குடிநீரை மக்கள் விலை கொடுத்து வாங்குகின்றனர். மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளை முழுமையாக தீர்ப்பதற்கு காவிரி குடிநீர் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.திட்டத்தை மறுமதிப்பீடு செய்து, அனைத்து கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்கும் வகையில் புதிய குழாய்கள்அமைத்து குடிநீர் வினியோகம் செய்தால் மட்டுமே மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கமுடியும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement