dinamalar telegram
Advertisement

தனுஷ்கோடி சாலை மூடல்; சுற்றுலா பயணிகள் தவிப்பு

Share
ராமேஸ்வரம் : தனுஷ்கோடிக்கு கடற்படை அதிகாரி சென்றதால் 3:20 மணி நேரம் தேசிய சாலை மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பரிதவித்தனர்.

இந்திய கடற்படை கிழக்கு பிராந்திய வைஸ் அட்மிரல் அஜேந்திர பகதுார் சிங் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை பார்வையிட நேற்று காலை 8:10 மணிக்கு 8:40க்கு திரும்பினார். இதற்காக தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை காலை 6:00 மணிக்கே மூடப்பட்டது. அவர் 8:40 மணிக்கு திரும்பி சென்றபின்னரும் சாலை திறக்கப்படவில்லை.

இதனால் சுற்றுலாப் பயணிகள், மீனவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.40 நிமிடம் தாமதமாக 9:20 மணிக்கு சாலையை போலீசார் திறந்தனர். இதனால் 100க்கும் மேலான வாகனத்தில் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மீனவர்கள் காத்துஇருக்க வேண்டியிருந்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement