dinamalar telegram
Advertisement

ஆழியாறு கவியருவியில் பார்க்கிங் :யானைகளை கண்காணிக்க முகாம்

Share
Tamil News
ஆனைமலை:பொள்ளாச்சி, ஆழியாறு கவியருவி அருகே, வனத்துறையினர் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.பொள்ளாச்சி, ஆழியாறு கவியருவியில் வனத்துறையினர் கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். வனவிலங்குகளின் படங்கள் வரைந்து, கம்பித்தடுப்புகள் அமைத்து, கழிப்பிட வசதி ஏற்படுத்தியுள்ளனர்.மேலும், சோதனைச்சாவடி அருகில், சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், இயற்கையை பாதுகாக்கும் நோக்கிலும், வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைத்து வருகின்றனர்.வழக்கமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் போது, கவியருவி அருகிலும், சோதனைச்சாவடி அருகிலும், 'பார்க்கிங்' இல்லாததால் வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால், வால்பாறை ரோட்டில் போக்குவரத்து பாதித்து, அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண வனத்துறையினர், ஆழியாறு சோதனைசமசாவடி மற்றும் கவியருவி அருகே, 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்தி வருகின்றனர்.கவியருவி அருகே அடிக்கடி காட்டு யானைகள் வந்து செல்கின்றன. இதனால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், வனவிலங்குகள் வேட்டையாடுவதை தடுக்கவும், கவியருவி 'பார்க்கிங்' அருகே வேட்டைத்தடுப்பு முகாம் அமைத்து வருகின்றனர். விரைவில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement