dinamalar telegram
Advertisement

பொருளாதார மேம்பாடு திட்டத்தில் கடன்பெற விண்ணப்பிக்கலாம்

Share
ராமநாதபுரம் : தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரமேம்பாட்டு கழகம் மூலம் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் 18 முதல் 60 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒருநபருக்கு மட்டும் கடன் உதவி வழங்கப்படும். தனிநபருக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சம், 6 சதவீதம் வட்டியிலும், பெண்களுக்கு புதிய பொற்கால திட்டத்தின்கீழ் ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாம். சிறுகடன் வழங்கும் திட்டத்தின் ரூ.1 லட்சம் வரையும், ஒரு குழுவினர் ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. கறவை மாடுகள் வாங்க ரூ.60 ஆயிரம் மேலும் கடன்பெறலாம்.

அனைத்து கூட்டுறவு வங்கி கிளைகளில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கூட்டுறவுவங்கியில் வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.-----------------
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement