dinamalar telegram
Advertisement

நீதிமன்றத்திற்கு கைதிகளை மொத்தமாக அழைத்து வரும் போலீசார்

Share
ராமநாதபுரம் : விசாரணை கைதிகளாக சிறையில் இருப்பவர்களை சமீப காலமாக மொத்தமாக அழைத்து வந்து ராமநாதபுரத்தில் நீதிமன்றங்களில் ஆஜர் செய்கின்றனர்.

கொலை, கொள்ளை, பலாத்காரம், போக்சோ உள்ளிட்ட வழக்குகளில் சிறையில் இருப்பவர்களை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நீதிமன்றங்களில் மொத்தமாக அழைத்து வந்து போலீசார் ஆஜர் செய்கின்றனர்.

நேற்று இரண்டு போலீஸ் பஸ்களில் 30க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்தனர்.ஒவ்வொரு நீதிமன்றத்திற்கும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். நேற்று இது போல் கூட்டம் கூட்டமாக துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் முன்னால் செல்ல மற்ற போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement