dinamalar telegram
Advertisement

தி.மு.க., அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் : ஓ.பி.எஸ்., - இ.பி.எஸ்., அறிவிப்பு

Share
Tamil News
சென்னை :''தி.மு.க., அரசின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, அ.தி.மு.க., தயாராக உள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மேற்கொள்வதை தி.மு.க., அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்,'' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று மதியம், கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர்கள்மற்றும் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். பின், ஓ.பி.எஸ்., அளித்த பேட்டி:அரசியல் ரீதியாக எங்களை சந்திக்க முடியாத தி.மு.க., அச்சுறுத்தும் வகையில் எங்களை எதிர்கொள்ள முடியாது. எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும், அதை எதிர்கொள்ள அ.தி.மு.க., தயாராக உள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் மேற்கொள்வதை, தி.மு.க., அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். சட்டப்பூர்வமான நடவடிக்கை எதுவாக இருந்தாலும், அதை எதிர்கொள்ள அ.தி.மு.க., தயாராக உள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது.
எந்த புதிய அரசும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கும்போது, அது மிகப்பெரிய அபாயகரமான சூழலை, அரசியல் ரீதியில் உருவாக்க அடித்தளமாக அமையும்.சோதனை நடத்தப்படுவதை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள தயாராக உள்ளோம். எந்தவித முகாந்திரமும் இல்லாமல், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நுழைந்துள்ளனர். இதற்கு பரிகாரம், நீதிமன்றம் வழியே பெறப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


இ.பி.எஸ்., கூறியதாவது:விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்ட மக்கள் உயர் கல்வி படிப்பதற்காக, ஜெயலலிதா பெயரில் பல்கலை அமைக்கப்படும் என, அறிவித்து நடைமுறைப்படுத்தினோம். தற்போது, உயர் கல்வித் துறை அமைச்சர், ஜெ., பல்கலை அண்ணாமலை பல்கலையுடன் இணைக்கப்படும் என, அறிவித்துள்ளார். அவர், அந்த மாவட்டத்தை சேர்ந்தவர். அந்த மாவட்ட மக்களுக்கு நன்மை செய்வதற்கு பதிலாக, ஜெ., பெயரில் பல்கலை இயங்கக் கூடாது என்பதற்காக, கல்லுாரிகளை அண்ணாமலை பல்கலையில் இணைக்க முயற்சிக்கிறார்.
நிதி நெருக்கடியை அமைச்சர், காரணமாகக் கூறுகிறார். நிதி இல்லாத நிலையில், மதுரையில் கருணாநிதி பெயரில் 200 கோடி ரூபாயில் நுாலகம் அமைக்கப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். நாங்கள் எதிர்க்கவில்லை. அதற்கு மட்டும் எப்படி நிதி வருகிறது?
இவ்வாறு அவர் கூறினார்.

உண்மையை சொல்லுங்கள் அரசுக்கு கோரிக்கைஅ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா தொற்று தீவிரமாக இருந்த போது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட இறக்கவில்லை என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்திருப்பது, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது.முதல்வராக பொறுப்பேற்றதும், பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், 'தமிழகம் ஆக்சிஜன் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன் செங்கல்பட்டில், 13 பேர் எதிர்பாராதவிதமாக இறந்திருக்கின்றனர்' என, குறிப்பிட்டுள்ளார்.முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதையும், அமைச்சர் பேட்டியையும் ஒப்பிட்டு பார்த்தால், முரண்பாடு தெள்ளத் தெளிவாகிறது. பிரதமருக்கு கடிதம் வாயிலாக முதல்வர் தெரிவித்த கருத்து உண்மையா; மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டியில் தெரிவித்த தகவல் உண்மையா என்பதை விளக்க வேண்டிய கடமை, தமிழக அரசுக்கு உண்டு.
எனவே, முதல்வர் இது குறித்து உடனடியாகஆராய்ந்து, உண்மை நிலையை, தமிழக மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5 + 24)

 • அப்புசாமி -

  எல்லாத்தூக்கும்தயார்னு சொல்ல வேண்டியதுதான். வேறு வழி? தமிழக பா.ஜ வும் இதைத்தான் சொல்லுது.

 • Visu Iyer - chennai,இந்தியா

  இவுங்க சின்னம்மா காலிலும் விழ மாட்டாங்க தனது சொந்த காலிலும் நிற்க மாட்டாங்க.. இவர்களை அரசியல் வாதிகள் என்று சொல்வதை விட....?

 • Visu Iyer - chennai,இந்தியா

  இது அச்சுறுத்தல் இல்லை. அம்மா வழியில் ஆட்சி என்றால் அம்மா வழியில் ஊழல் தானே.. சட்டம் தன கடமையை செய்கிறது.. சட்டத்தின் கடமையை கட்டி போட நினைக்கும் இவர்களை அரசியல் வரலாற்றில் இருந்தே அடியோடு நீக்கி விட வேண்டும்.

 • RajanRajan - kerala,இந்தியா

  இன்னாது அரசியல் காழ்ப்புணர்ச்சி ரைடா. இன்னாங்கடா இது ரைட்டுன்னு வந்துட்டாலே வழக்கமா எல்லாவனும் சொல்லுற ஒரு டைலாக் இது தானே. என்னவோ எல்லாவனும் கை சுத்தம்ங்கிற மாதிரியும் ரொம்ப நாணயஸ்தன் பரம்பரை மாதிரியுமில்லே தலையிலே துண்டை போர்த்திக்கிறானுங்க. எல்லாவனும் ஊரையடிச்சு உலையில் போட்டு அனுபவிக்கிற பொதுசனங்க துட்டு தானே உங்ககிட்டே இருக்கிறதெல்லாம், எதோ பரம்பரை பணக்காரன் மாதிரில்லே பீலா வுடுரானுங்க.. அப்புறம் ரைடு பண்ணுறதுலே இன்ன காழ்புணர்ச்சியாம். சரி அண்ணே சூட ரெண்டு தயிர் வடை கொடுங்க. அடேய் ஓடிப்போய்டு இங்கே இருந்து. உலகத்திலே நீ எங்கே போயி தேடுனாலும் நீ சொல்லுற வடை கிடைக்காது மவனே.

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

   காப்பாத்துப்பா:: உங்க PM CARE க்கு correct ஆஹ் digital COMMISSION அனுப்பினவர்கள் தான் இவர்கள் இருவரும் அப்புறம் என்ன, நீ என்ன ஒழுங்கா TN தேர்தல் 500 கோடி என்று CT ரவி பெட்டியில் சொன்னார், SV segar ஆளுக்கு 13 கோடி என்கிறார் அப்புறம் நீ நேர்மை பற்றி கிழிக்கிற உனக்கு எது இந்த பணம், இந்த நேர்மை எளிமை கருமை எல்லாம் உனக்கு ஒத்துவராது இப்போ இருக்கும் நிலையில் நீங்கள் ஊழலில் கழகங்கள் எல்லாம் வெட்கப்படும் அளவுக்கு வந்திடுவீர்கள்

Home அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ரெய்டு: பன்னீர்செல்வம் - பழனிசாமி (24)

 • m.viswanathan - chennai,இந்தியா

  அண்ணா திமுக ஆரம்பிக்கும் முன் நீங்கள் என்ன தொழில் செய்து கொண்டு இருந்திர்கள் ? ஏதேனும் கஷ்டப்பட்டு சிறு தொழில் தொடங்கி , வளர்ச்சி அடைந்து , பெரிய தொழில் அதிபர்கள் ஆகி , எத்துணை பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து , முன்னேறி வந்திர்கள் ? சாதாரண கட்சி உறுப்பினராக இருந்து , கட்சியில் உயர் பதவி அடைந்தாலும் , இவ்வளவு பணம் சம்பாதிக்க முடியுமா , அதிக பட்சமாக , அரசு வேலை , அல்லது தனியார் வேலை இல் ஓய்வு பெற்றால் , ஒரு 15 அல்லது 20 லட்சம் ரூபாய் தானே கிடைக்கிறது , நீங்கள் MLA அல்லது மந்திரியாய் இருந்தவன் எப்படி , சொந்தமாக , கல்லூரி , Multi Speciality Hospitals அனைத்தும் கட்டி , பணத்தில் கொழிக்க முடிகிறது , எங்கேயோ நம் ஜனநாயக அமைப்பில் தவறு இருக்கிறது , உங்கள் அனைவரையும் பாதுகாப்பாக வைத்து கொண்டு தலைமுறை , தலைமுறைக்கும் சொத்து சேர்த்து வைத்து கொண்டு , குறிப்பிட்ட சாதியினரை வசை பாடி கொண்டு , வாழ்கிறீர்களே உங்கள் வம்சம் விளங்குமா , பாவிகளா , எம் தேசத்தை , கடந்த 60 ஆண்டுகளாக நாசம் செய்து , மக்கள் மீள முடியாமல் செய்து விட்டிர்களே . அணைத்து துறைகளிலும் கமிஷன் அடிக்க தெரிந்த உங்களுக்கு உழைப்பு என்றால் என்ன என்றாவது உங்களுக்கு தெரியுமா ,

 • Nagercoil Suresh - India,இந்தியா

  ரெய்டுனால் பலன் இருக்கிறதோ இல்லையோ இவர்கள் இருவரையும் திரும்பவும் கூட்டு சேர வைத்துவிட்டது...பேட்டியின் அவசரம் அச்சத்தை பிரதிபலிக்கிறது...

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  ஏம்பா பொன்னேர் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டியது கூட தெரியத அசமந்தங்கள் நீங்கள் இப்போ இதற்க்கு கும்பல ஓடிவருகிறீர்கள் அடுத்து நீர் தான் இலக்கு

 • ars -

  தேர்தல் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றவில்லை என்று அதிமுக தானே கேட்டது. அதான் இப்ப நிறைவேற்றுகிறார்கள்

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  அரசியல் காழ்ப்புணர்ச்சி. அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி. பழிவாங்கும் போக்கு. திசை திருப்பும் முயற்சி. சட்ட மற்றும் அரசியல் வழிகளில் எதிர்கொள்ளப்படும். இவ்வளவு சொன்னவங்க ஒண்ணு மாத்திரம் சொல்லவில்லை. விஜயபாஸ்கர் ஊழல் செய்யாத, கள்ளப் பணம் சேர்க்காத, நிரபராதி, அப்படின்னு சொல்லலியே?

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  ஏற்கனவே திமுக வின் காழ்ப்புணர்ச்சி அரசியல் கர்நாடக குன்ஹா ..குமாரசாமி வழியாக...உச்சநீதிமன்றம் வரை போனது.. அப்போது உங்களால் அது காழ்ப்புணர்ச்சி என நிருபிக்க முடியவில்லையே ஏன்? திமுக தான் கொள்ளைகூட்டம்...திருட்டு திமுக...நில அபகரிப்பு கட்சி என எத்தனை ஆண்டு காலம் மக்களிடம் இப்படி சொல்லி வந்தீர்கள்? இப்போது திமுக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும்.. அபாயகரமான அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்துகிறார்கள் என பீதியாகிறீர்கள்.. ஏன் காலம் காலமாக திமுக மேல சொன்னதில் எதையாவது நடவடிக்கை எடுத்து தண்டனை வாங்கி கொடுத்தீங்களா? நீங்கதானே திமுக வை விட அதிக காலம் ஆட்சியில இருந்தவங்க ? நீங்கதானே உங்க அம்மாவை அயர்ன் லேடின்னு புகழறீங்க...அந்த இரும்பு மனுஷியாலயும் திமுக மேல நடவடிக்கை எடுத்து தண்டிக்கமுடியலையா? செய்யற களவாணித்தனம் அவ்வளவையும் செய்துவிட்டு யோக்கியன் என எழுதிய அட்டையை ஏந்திக்கொண்டு ஊரை ஏமாற்ற முடியாது... திமுக தவறு செய்திருந்தால் இந்நேரம் தண்டனை வாங்கி கொடுத்திருக்க வேண்டும்..அதற்குத்தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்... மக்களை முடர் களாக்கி எப்போதும் வசனங்களால் ஏமாற்றமுடியாது.

 • ஷண்முக பிரியன் - AMBATTUR,இந்தியா

  / கடந்த ஆட்சியில் செந்தில்பாலாஜி வீட்டில் ரைடு நடந்தது......அதன் நீட்சிதான் இது....

 • RAMAKRISHNAN NATESAN - LAKE VIEW DR, TROY 48084,யூ.எஸ்.ஏ

  நான்கு வருடங்கள் முன்பு தலைமை செயலகத்தில் ரெய்டு நடந்தபோது அமைதியாக இருந்தவர் தாங்கள்தானே? அப்புறம் அப்போ சிட்டிங் அமைச்சர் வீட்டில் ரெய்டு நடந்தபோதும் அமைதியாக இருந்தது தாங்கள்தானே? முதல் மந்திரி பக்கத்து ரூமில் ரைடு அப்போ வாயை திறக்காத பொதி தர்மர் இப்போ பொங்குகிறார்

 • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

  இது ஒன்றும் புதிதல்ல.அதிமுக ஆட்சியில் திமுக தலைவர்கள் வீடுகள் ரெயிடு செய்யப்பட்டன இப்பொது அதிமுகவினர் மீது ரெயிடு நடக்கிறது. வழக்கம்போல் வழக்குகள் போடப்படும் கைதுகள் நடக்கும் ஜாமீன்கள் கிடைக்கும் அதோடு விஷயம் நீண்டுகொண்டே போகும் அடுத்த ஐந்து ஆண்டுகள் முடிந்து வேறு ஆட்சி வரும். இது ஒரு சைக்கிள் போன்று சுழன்று வரும் விஷயம்தான் வருத்தப்படவோ ஆவேசப்படவோ ஒன்றும் இல்லை.யாருடைய பணமும் திரும்ப அரசின் கருவூலத்துக்கு வராது. எல்லாம் நல்லபடி நடக்கும் கவலைப்படாதீர்கள். திமுகவும் அதிமுகவும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று காமராஜர் அன்று சொன்னது ஒன்றும் வாய் தவறி சொன்னது அல்ல, அதுதான் உண்மை என்பதை கடந்த அறுபது ஆண்டுகால திராவிட ஆட்சி நமக்கு நிரூபித்திருக்கிறது. யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே,,,

 • Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ

  அமைதி காக்கவும். இன்னும் 2 நாட்களில் ரெட்டைர்கள் உங்களுக்கும் வர போகிறது ஆப்பு. உப்பு தினவன் தனி குடிக்கணும். ஜெயவே ஜெயிலுக்கு போய்ட்டுதான் வந்தவங்க நீங்க ரெண்டுபேரும் எம்மாத்திரம்.

  • CHARUMATHI - KERALA,இந்தியா

   oh is it so why no one from dmk is gone to jail in wealth cases are they that much saints? it shows clearly how dmk people do their corruption scientifically. and admk always get caught.

 • M Ramachandran - Chennai,இந்தியா

  விடுங்கள் மடியில் பயமிருந்தால் வழியில் பயம் என்பார்கள்.நீங்கள் செய்ய மறந்ததை நினைவூட்டு கிறார்கள்.

 • Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

  சொத்துகுவிப்பு வழக்க கூட பொய் வழகுன்னா..அப்படியே சொல்லிண்டே இருந்தா...குமாரசாமி புண்ணியத்துல கொஞ்ச நாள் பதவியே உட்கார்ந்திருந்தா ...நம்மவா உச்சநீதிமன்றத்திலேயே நம்மவாவ குற்றவாளின்னுட்டா.... துஷ்டரீதியிலே சம்பாதித்த சொத்து எல்லாம் பறிமுதல் அப்படின்னுட்டா... இவாளெல்லாம் இனி குமாரசாமி மாதிரி ஆளை தேடிண்டு இருக்க போறா....ஆனா தேடினாலும் கிடைக்காதுன்னுட்டு இவளுக்கு தெரியப்போறது இல்ல...இனி மேலே இருப்பவரும் பெப்பே காட்டுவார்...பாவம் தான் போங்கோ...இனி ஒரே கதறல் தான்...

 • Venkat - Chennai,இந்தியா

  மத்திய அரசு ரைட் பண்ணுது பழிவாங்குது சொன்ன DMK .இப்ப என்ன பண்ணுது .பாவம் மக்கள் பிஜேபி மேல கோவப்பட்டு DMK ஓட்டு போட மக்கள் ....

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

   உண்மையில் இது இப்போது தேவை இல்லை தான் இது ஒரு பயமுறுத்தல் தான் . இந்த காலத்தில் தேவை அற்றது

 • R PURUSHOTHAMAN - Arni,இந்தியா

  Sir, kindly arrest remaining ex ministers (all affected)

 • Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

  என்ன வ்வொய்... மணிகண்டன் மீது நடவடிக்கை பாய்ந்தபோது எங்கே வ்வொய் போனீர்? என்ன நடக்குது வ்வொய் உம்ம கட்சிலே? என்னவோ போங்கோ.. உங்க எல்லோரையும் பார்த்தா பரிதாபம் தான் மிஞ்சறது.

 • K BALASUBRAMANIAN - sattur,இந்தியா

  மடியில் கனம் இல்லைனா பயம் எதற்கு? அந்த முன்னாள் அமைச்சரையே பேட்டி கொடுக்க சொல்ல வேண்டியதுதானே ?

  • Narayanan - chennai,இந்தியா

   மீடியாக்கள் திமுகவின் சொத்து . முன்னாள் அமைச்சர் சொன்னதை திரித்து வெளியிடும் ஆற்றல் மிக்கவர்கள் . அது அவரின் வழக்கிற்கு விபரீதமாக முடியும் .மேலும் திமுகவே கேட்க்கும் , என்ன தருவீர்கள் நாங்கள் அமைதியாக இருக்க இவரும் ஒரு பெரிய தொகையாக கொடுத்துவிட்டால் நல்லவர் ஆகிவிடுவார் செந்தில்பாலாஜி போல .கரூர்வாசிகள்தானே . இன்றுவரை, ஊழல் ஆட்சி செய்யமாட்டோம் என்று ஸ்டாலின் பஞ்சாயத்து அரசு அறிக்கை விடுக்கவில்லையே ஏன்?

 • Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்

  திரு மு கருணாநிதி அவர்களின் குடும்பக் கட்சிக்கு இதைவிட வேறு என்ன தெரியும். எம்ஜிஆர் அவர்களை மட்டும் அசைக்க முடியவில்லை. திமுக ஆட்சிதான் சட்ட ஒழுங்குப் பிரச்சனையால் மத்திய அரசால் கலைக்கப்பட்டது நினைவில் இருக்கின்றதா?

 • rajan - erode,இந்தியா

  அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பாலங்களை ஜெயலலிதா இடிக்க உத்தரவிட்டார் தரம் இருந்ததால் இடிக்க முடியவில்லை அப்போது இந்த இருவரும் என்ன செய்தார்கள்

 • Mohamed Malick - Dubai,இந்தியா

  அப்ப உங்க ஆட்சியில் பண்ணுன ரைடும் அந்த ரகம்தானா

 • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

  " சும்மா " பயமுறுத்தாதீங்க நீங்க மட்டும் சுத்த சுயம் பிரகாச சொக்கத் தங்கமா என ர ர -க்கள் கேட்பது காதில் விழுகிறது.

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  நீங்கள் விட்டது உங்களை சீண்டுகிறது நான்கு வருடம் ஆட்சி மட்டும் நடத்தியதால் எதிரிகலய் தொந்தரவு நீங்கள் செய்யவில்லை ஆனால் அதை இவர்கள் கச்சிதமாக செய்து இயக்கத்தை அழிக்கப்பார்க்கிறார்களோ எனவோ ..

Advertisement