dinamalar telegram
Advertisement

மேல்நிலை தொட்டி பயன்பாட்டுக்கு வந்தது

Share
சாயல்குடி : சாயல்குடி பேரூராட்சியில் 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி பயன்பாட்டிற்கு வந்தது.

பேரூராட்சி செயல் அலுவலர் எம்.சேகர் கூறியதாவது:சாயல்குடி பேரூராட்சியில்15 வார்டுகள் உள்ளன. இங்கு 11 பெரிய மற்றும் நடுத்தர மேல்நிலை தொட்டிகள் உள்ளன. தற்போது ரூ.68 லட்சம் மதிப்பீட்டில் 3 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் மூலம் 1600 வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்கும். 600 பொது குழாய்க்கும் தண்ணீர் கிடைக்கும்.பிரதானமாக காவிரி குடிநீர், ஐந்து ஏக்கர் பகுதியில் உள்ள 9 கிணறுகளில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு குழாய்களில் வினியோகம் செய்யப்படுகிறது என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement