dinamalar telegram
Advertisement

நெனச்சது ஒன்னு... நடந்தது ஒன்னு...! நூலகமாக மாறிய அம்மா மினி கிளினிக்

Share
Tamil News
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையத்தில் முதன்முதலாக திறக்கப்பட்ட அம்மா மினி கிளினிக்குக்கு, டாக்டர், செவிலியர் யாரும் வராததால், இக்கட்டடம் நுாலகமாக மாற்றப்பட்டது.மேட்டுப்பாளையம் தாலுகாவில், முதன்முறையாக ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட, ராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில், 'அம்மா மினி கிளினிக்' திறக்கப்பட்டது. இங்கு டாக்டர், செவிலியர் நியமனம் செய்து, மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்காக, கட்டில், மெத்தை புதிதாக வாங்கி போடப்பட்டது. ஆனால், மினி கிளினிக் திறக்காததால், இக்கட்டடம் நுாலகமாக மாற்றப்பட்டது.ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி கூறியதாவது:மேட்டுப்பாளையம் தாலுகாவில் முதன்முதலில் ஜடையம்பாளையம் ஊராட்சி, ராமம்பாளையத்தில் தான், மினி கிளினிக் திறக்கப்பட்டது. டாக்டர், செவிலியர் ஆகியோர் பணியமர்த்தப்படுவர் என அதிகாரிகள் அறிவித்தனர். இந்த ஊராட்சி பொது மக்களுக்கு, கிளினிக் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், பணியமர்த்தப்பட்ட டாக்டர், செவிலியர், கொரோனா சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டதால், மினி கிளினிக் பூட்டியே கிடந்தது. தற்போது தமிழக அரசு ஒவ்வொரு ஊராட்சியிலும், திருவள்ளுவர் நுாலகம் திறக்கும்படி அறிவித்துள்ளது. இதற்காக, மினி கிளினிக் கட்டடம், நுாலகமாக மாற்றப்பட்டது. டாக்டர், செவிலியர் வரும் பட்சத்தில், வேறொரு கட்டடத்தில் மினி கிளினிக் அமைக்க, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement