dinamalar telegram
Advertisement

பள்ளிகள் மூடப்பட்டதால் குழந்தை தொழிலாளர் அதிகரிப்பு

Share
சென்னை:கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்காததால், குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, தமிழக அறிவியல் இயக்கம்நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பள்ளி செல்லா குழந்தைகளிடம் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து, மாநிலம் முழுதும், 2,137 மாணவர்களிடம், பயிற்சியளிக்கப்பட்ட தன்னார்வலர்கள் வாயிலாக ஆய்வு செய்தது.இது குறித்து அதன் செயலர் சுப்பிரமணி, தலைவர் தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று அளித்த பேட்டி:எங்கள் ஆய்வில், 14 வயதுக்கு குறைவான, 13 சதவீதம் பேர், குடும்ப சூழலால் குழந்தை தொழிலாளர்களாக மாறியுள்ளனர். 10 சதவீதம் மாணவர்கள், மேல்நிலை வகுப்புகளுக்கு செல்லாமல் விடுபட்டுள்ளனர்.

இணையவழி கல்வி



தனியார் பள்ளிகளில், கட்டணம் செலுத்த முடியாமல், 7 சதவீதம் மாணவர்கள் விலகி உள்ளனர். அதேநேரம், அரசு பள்ளிகளில், 5 சதவீதம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களை தக்க வைக்கும் வகையில், தரமான கட்டமைப்பு, போதுமான ஆசிரியர் - மாணவர் விகிதம், கல்வி, பள்ளிகளை திறப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை, அரசு முன்னெடுக்க வேண்டும்.அதேபோல இணையவழி கல்வியில், 49 சதவீத மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர்.

41 சதவீதம் பேர் மட்டுமே, கல்வி தொலைக்காட்சி பார்த்தாலும், பாடங்கள் புரியவில்லை என்கின்றனர். எனவே, இணையவழி கல்வி, கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, அரசு மறுஆய்வு செய்ய வேண்டும். முட்டையுடன் சத்துணவு சாப்பிட முடியாமல், குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக, 38 சதவீத பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

விளையாட்டுடன் பாடம்



மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும் என, பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்த போதும், பள்ளிகள் திறந்ததும் பாடங்களை நடத்தாமல், மாணவர்கள், ஆசிரியர்கள் மனம் விட்டு பழகும் வகையில், மகிழ்ச்சியான விளையாட்டுகளுடன், பாடங்களை துவக்க வேண்டும் என்றனர்.கொரோனா பாதிப்பால், 1.1 சதவீதம் பெற்றோர் இறந்துள்ளனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகள் மன அளவிலும், பொருளாதார அளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதேநேரம், கொரோனா தொற்று பாதிக்காத கிராமங்களும் அதிகளவில் உள்ளன. அதுபோன்ற பகுதிகளில், பள்ளிகளை திறக்க வேண்டும் என விரும்புகின்றனர். எனவே பள்ளி ஆசிரியர்களுக்கு, தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா

    தவறான கருத்து கணிப்பு. இருப்பவனே வேலை இன்றி தவிக்கிறான். இதில் குழந்தை தொழிலாளர்களாம். நல்ல கதை. எட்டு கோடி மக்கள் தொகையில் இரண்டாயிரம் பேரை சந்தித்து ஒரு முடிவுக்கு வருவது அந்த அறிவியல் இயக்கத்தின் தரத்தை தெரிவிக்கிறது. தவறான பொய் கணிப்புகளை ஊடகங்கள் வெளியிடாதீர்கள்

Advertisement