dinamalar telegram
Advertisement

தரம் குறைவா இருந்தா தயங்காம சொல்லுங்க...! ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அறிவிப்பு

Share
Tamil News
பெ.நா.பாளையம்:'பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள், பாலங்கள் பணிகளில், கட்டுமான தரம் மற்றும் குறைகள் தொடர்பாக, பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்' என, பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் அறிவித்துள்ளது.தமிழக அரசின், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, கிராம, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான மூன்றடுக்கு பிரிவுகளை கொண்டு செயல்படுகிறது. கிராம மக்களின் அடிப்படை தேவைகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் வாயிலாக செயல்படுத்தப்படுகின்றன. மூன்றடுக்கு உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக, சிறந்த உள்ளாட்சி நிர்வாகத்தை வழங்க இவ்வியக்கம் உதவுகிறது. ஊரக சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் ஆண்கள் சுகாதார வளாகங்கள் அமைத்தல், பொது கழிப்பிடங்கள் அமைத்தல் மற்றும் பராமரித்தல், சுகாதாரத்தை பேணுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார ஊராட்சி, கிராம ஊராட்சி என இரண்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பி.டி.ஓ.,) பணிபுரிகின்றனர். ஒன்றிய பொறியாளர், உதவி பொறியாளர், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் சாலை ஆய்வாளர்கள், தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்கின்றனர். பொறியாளர்களின் செயல்பாடுகள், கோட்ட அளவில் உள்ள ஊரக வளர்ச்சி உதவி செயற்பொறியாளரால் கண்காணிக்கப்படுகிறது.ஒவ்வொரு மாவட்டத்திலும், மாநில அரசு சார்பில் முதல்வரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டம், தன்னிறைவு திட்டம், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், நபார்டு திட்டம், சுகாதார தமிழகம், குடிமராமத்து திட்டம், கிராம ஊராட்சிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.மத்திய அரசு சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், எம்.பி., உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தூய்மை பாரத இயக்கம் உட்பட பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தவிர, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், தீன்தயாள் உபாத்யாயா ஊரக திறன் வளர்ப்பு திட்டம், உழைக்கும் மகளிருக்கான அம்மா இருசக்கர வாகன திட்டம் ஆகியன செயல்படுத்தப்படுகின்றன.திட்டங்களின் வாயிலாக, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சிப் பணிகளின் தரம் மற்றும் குறைகள் இருந்தால், பி.டி.ஓ., (வட்டார வளர்ச்சி) 74026 07265, பி.டி.ஓ., (கிராம ஊராட்சி) 74026 07266, உதவி செயற்பொறியாளர் (சாலை மற்றும் பாலங்கள்) 74026 07241, உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) 74026 07243, உதவி பொறியாளர் (ஊரக வளர்ச்சி) 74026 07307, உதவி பொறியாளர் (ஊரக வளர்ச்சி) 74026 07271 ஆகிய மொபைல் போன் எண்களில் புகார் தெரிவிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement