dinamalar telegram
Advertisement

ரோட்டில் தேங்கிய கழிவுநீர்; வாகன ஓட்டிகள் சிரமம்

Share
பரமக்குடி : பரமக்குடி ரயில்வே பீடர் ரோட்டில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது.

பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை தொடங்கி ரயில்வே ஸ்டேஷன் வரை ரயில்வே பீடர் ரோடு உள்ளது. இப்பகுதியில் ஆர்ச் தொடங்கி, காந்திசிலை வரை ரோடு முழுவதும் தண்ணீர் வழிந்தோட வழியின்றி தேங்கி நிற்கிறது.ஒவ்வொரு முறை மழையின் போதும் தண்ணீர் தேங்குகிறது. ரோடும் பள்ளமாகி உள்ளது. தேங்கிய கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

அருகில் ரயில்வே தபால் பிரிப்பகம், தனியார் மகால்கள், கண் மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளன.அப்பகுதியில் செல்லும் வாகனங்கள், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் பயணிகள் சிரமத்திற்குஉள்ளாகின்றனர். சுகாதாரம் கருதி இவற்றை சீர் செய்து ரோடு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement