dinamalar telegram
Advertisement

பா.ஜ.,வுக்கு தாவிய பிற கட்சியினர்

Share
அன்னுார்:அன்னுார் அருகே கஞ்சப்பள்ளியில், வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், பல்வேறு கட்சிகளில் இருந்து நிர்வாகிகள் தொண்டர்கள் 40 பேர் இணையும் விழா நடந்தது. பா.ஜ., வடக்கு ஒன்றிய தலைவர் சத்தியராஜ் தலைமை வகித்தார்கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் பேசுகையில், ''மத்திய அரசு, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு அறிவித்த பல்வேறு கடன் சலுகைகளால், கொரோனா காலத்திலும் சமாளித்து செயல்பட உதவியுள்ளது. இலவச சமையல் காஸ் இணைப்பு, விவசாயிகளுக்கு உதவித்தொகை, கழிப்பறைகள் கட்ட 12 ஆயிரம் என, மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், கிராம மக்களுக்கு உதவியாக உள்ளன,'' என்றார். கஞ்சப்பள்ளி, அல்லப்பாளையம் ஊராட்சிகளை சேர்ந்த பல்வேறு கட்சியின், 40 பேர் பா.ஜ.,வில் இணைந்தனர். விவசாய அணி மாவட்ட செயலாளர் சுப்பையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செந்தில்குமார், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் கார்த்தி, விமல்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement