dinamalar telegram
Advertisement

பேரிடர் முன்னெச்சரிக்கை புகார் செய்ய புதிய வசதி

Share
சென்னை:பேரிடர் முன்னெச்சரிக்கை தொடர்பாக, மொபைல் போனில் பொது மக்கள் புகார் அளிக்கும் வசதியை, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் துவக்கியுள்ளது.

கனமழை, புயல், சுனாமி உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் குறித்து, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வாயிலாக, முன்னெச்சரிக்கை செய்யப்படுகிறது. பேரிடருக்கு பின், பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, மீட்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சாலைகளில் ஆங்காங்கே மரக்கிளைகள், மின் கம்பங்கள் விழும் நிலையில் இருந்தால், அவற்றை முன்கூட்டியே அகற்ற வேண்டும்.

இதேபோல, ஆபத்தான நிலையில் உள்ள கட்டடங்களையும், பேனர்களையும் அகற்ற வேண்டும்.குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள், வன விலங்குகள் நடமாட்டம் இருந்தால், அவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். மழை நேரங்களில் கால்வாய்களில் அடைப்பு இருந்தால், அதை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும்.

அவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதுபோன்ற பேரிடர் முன்னெச்சரிக்கை குறித்து, பொது மக்கள் புகார் அளிப்பதற்காக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் போனில், 94458 69848 என்ற எண்ணில், 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக புகார் அளிக்கலாம்.

அது மட்டுமின்றி, WWW.TNSDMA.TN.GOV.IN என்ற, இணையதளத்திலும் புகார் செய்யலாம்.இந்த புகார்கள், பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் இருந்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, உடனுக்குடன் அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய வசதிகளை பயன்படுத்தி, இரண்டு வாரங்களில், 250 புகார்கள் பெறப்பட்டு, உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக, பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement