dinamalar telegram
Advertisement

தவறி விழுந்து தொழிலாளி பலி

Share
சூலுார்:பீகார் மாநிலம், மகிநாத் நகரை சேர்ந்தவர் சுரஜ்குமார், 19. சூலுார் அடுத்த அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு குடோனில், 'ஷீட்' பொறுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த, 20ம் தேதி மாலை பணி முடிந்து, 60 அடி உயர மேற்கூரையில் இருந்து இறங்கி கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக, கால் இடறி, மேலே இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். சக தொழிலாளர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். சூலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement