dinamalar telegram
Advertisement

தடுப்பூசி ஒதுக்கீடு: பாரபட்சம் என புகார்

Share
அன்னுார்:'தடுப்பூசி ஒதுக்கீட்டில் பாரபட்சம்' என, காட்டம்பட்டி ஊராட்சி நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளனர்.அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு வாரமும், தேர்வு செய்யப்பட்ட சில ஊராட்சிகளில், தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடக்கிறது.முகாம் நடத்துவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது என புகார் எழுந்துள்ளது.காட்டம்பட்டி ஊராட்சி தலைவர் காயத்ரி பாலகிருஷ்ணன், துணைத் தலைவர் மதியழகன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனு:அன்னுார் ஒன்றியத்தில் உள்ள 21 ஊராட்சிகளில், காட்டம்பட்டி ஊராட்சியில் தான் தொற்று பாதிப்பு அதிகம். குறைந்த எண்ணிக்கையில் மக்கள் தொகை உள்ள ஊராட்சிகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. ஆனால், 6,000 பேர் உள்ள காட்டம்பட்டி ஊராட்சியில், சுகாதாரத்துறை சார்பில் ஒரு முகாம் கூட இதுவரை நடத்தப்படவில்லை.ஊராட்சி நிர்வாகத்தின் சொந்த முயற்சியில், இங்குள்ள தொழிற்சாலைகளின் ஏற்பாட்டில் ஒரு முறை தடுப்பூசி முகாம் நடத்தினோம்.எனவே, காட்டம்பட்டியில் குறைந்தபட்சம், 1000 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்து சிறப்பு முகாம் நடத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement