dinamalar telegram
Advertisement

ஒப்பந்ததாரர்கள் நலச்சங்க நிர்வாகிகள் தேர்வு

Share
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர் நலச்சங்க நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.பெரியநாயக்கன்பாளையத்தில் நடந்த கூட்டத்தில், சங்கத்தின் தலைவராக வசந்தகுமார், செயலாளராக தங்கராஜ், பொருளாளராக சம்பத்குமார், துணை தலைவராக சுரேஷ்குமார், துணை செயலாளராக முருகேசன், செயற்குழு உறுப்பினர்களாக பழனிசாமி, மருதையன், குப்புராஜ், மாணிக்கராஜ், அழகுமலை, துரைசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.தொழில்நுட்ப அங்கீகாரம் இல்லாமல் ஒப்பந்தப்புள்ளி கோரக் கூடாது. கட்டுமானப் பொருட்களான கம்பி, சிமெண்ட், செங்கல் உள்ளிட்டவைகளின் விலை அதிகரித்துள்ளதால், கட்டுமானத்துக்கான தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement