dinamalar telegram
Advertisement

10 பேருக்கு தொற்று: 394 பேருக்கு பரிசோதனை

Share
அன்னுார்:அன்னுார் தாலுகாவில், நேற்று 10 பேருக்கு தொற்று உறுதியானது. 394 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், இடிகரை பேரூராட்சியில் மூவர், கோவில்பாளையம் பேரூராட்சியில் ஒருவர், அத்திப்பாளையம் ஊராட்சியில் ஒருவர் என, ஐந்து பேருக்கு தொற்று உறுதியானது. கள்ளிப்பாளையம், அக்ரஹார சாமக்குளம், தேவம்பாளையம், அத்திப்பாளையம் என நான்கு இடங்களில், ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. அன்னுார் ஒன்றியத்தில், ஐந்து பேருக்கு தொற்று உறுதியானது. தாலுகாவில், 10 பேருக்கு தொற்று உறுதியானது.அன்னுார் ஒன்றியத்தில், 190 பேர், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில், 204 பேர் என, 394 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அன்னுார் ஒன்றியத்தில், குமாரபாளையம், அ.மேட்டுப்பாளையம், குப்பனுார் நாரணாபுரம் என நான்கு ஊர்களில், 1,050 பேருக்கு என, தாலுகாவில் 2,050 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement