dinamalar telegram
Advertisement

கட்டட வரன்முறை ரூ.33.77 கோடி வசூல்

Share
சென்னை:விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்த, ஐந்து ஆண்டுகளில், 33.77 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட கட்டடங்களை வரமுறைப்படுத்த வாய்ப்பு தரப்பட்டது.

நீதிமன்ற தடை காரணமாக, இதில் இறுதி ஆணை பிறப்பிக்க முடியாது என்றாலும், மக்கள் இதில் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து வருகின்றனர். ஐந்து ஆண்டுகளில், 2,210 விண்ணப்பங்கள்,'ஆன்லைன்' வாயிலாகவும், 1,190 விண்ணப்பங்கள் நேரடியாகவும் பெறப்பட்டுள்ளன. இதில் பதிவு மற்றும் வரன்முறை கட்டணமாக, 33.77 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

இது குறித்து கட்டட அமைப்பியல் பொறியாளர் பி.பாலமுருகன் கூறியதாவது:கடந்த, 2017ல் கட்டணம் செலுத்திய பல விண்ணப்பங்களுக்கு, இன்னும் இறுதி ஆணை பிறப்பிக்கப்பட வில்லை. ஒவ்வொரு விண்ணப்பத்தாரரும்,2 லட்சம் ரூபாய் முதல் பல்வேறு தொகைகளை வரன்முறைக்காக செலுத்தி இருக்கிறோம்.புதிய அரசும், முதல்வரும் தலையிட்டு, நல்ல முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement