dinamalar telegram
Advertisement

ஆவணங்கள் இல்லை: லாரி பறிமுதல்

Share
சூலுார்:ஆவணங்கள் இன்றி, கல் லோடு ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.சூலுார் அடுத்த சிந்தாமணிப்புதுார் அருகே கனிமவளத்துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார் மற்றும் ஆய்வாளர்கள் பிரசாந்த், ரமேஷ் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். பெரியகுயிலியை சேர்ந்த சண்முகம் என்பவருக்கு சொந்தமான, கல் லோடு ஏற்றி வந்த லாரியை நிறுத்தி, ஆவணங்களை ஆய்வு செய்தனர். பர்மிட் உட்பட ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து, சூலுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து, டிரைவர் அரவிந்தராஜ், 30, என்பவர் மீது புகார் அளித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement