dinamalar telegram
Advertisement

எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஏழைகள்? புதிய பஸ்கள் வாங்க ஐகோர்ட் தடை!

Share
Tamil News
சென்னை: மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள் இல்லாமல், புதிய பஸ்களை வாங்க, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அரசின் திட்டத்தை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

அரசு கட்டடங்கள், பொது போக்குவரத்து வாகனங்களில், மாற்றுத் திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகள் இருக்க வேண்டும் என, மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டது.அதன்படி, மாற்றுத் திறனாளிகள் எளிதில் ஏறி, பயணிக்கும் வகையில், வசதிகளுடன் கூடிய பஸ்களை இயக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.இம்மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன், ''மாற்றுத் திறனாளிகள் வசதிக்காக, 10 சதவீத பஸ்கள் மட்டுமே வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது. தற்போது, சாலைகளின் நிலைமை மோசமாக உள்ளது; அவற்றை மேம்படுத்த வேண்டும். மேற்கொண்டு அறிக்கை பெற்று தெரிவிக்கிறேன்,'' என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி, 'சட்டத்தை நீங்கள் பின்பற்ற வேண்டும்' என்றார். போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'முதலில், 10 சதவீத பஸ்களை வாங்குகிறோம். மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையிலான பஸ்சுக்கு, 58 லட்சம் ரூபாய் வரை செலவாகும். நிதி பிரச்னை உள்ளது. இந்தியா, ஏழை நாடு' என்றார்.

உடனே, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, ''ஆட்சியாளர்கள் எத்தனை பேர், ஏழைகள்; எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஏழைகளாக உள்ளனர். சட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, போக்குவரத்து கழக வழக்கறிஞர், '10 சதவீதத்தில் துவங்கி, படிப்படியாக அதிகரிக்கிறோம்' என்றார். அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம், ''நிலையை ஆராய்ந்து, நீதிமன்றத்தில் தெரிவிக்கிறேன். அதற்கு அவகாசம் வேண்டும். பொது மக்கள் பாதிக்கக் கூடாது,'' என்றார்.

அதைத்தொடர்ந்து, முதல் பெஞ்ச், 'மாற்றுத் திறனாளிகள் அணுகும் வகையில் வசதிகள் இல்லாமல், பொது போக்குவரத்து சேவைக்காக புதிய பஸ்கள் வாங்கக்கூடாது' என, உத்தரவிட்டது. அரசு தரப்பில், திட்ட நடவடிக்கையை தெரிவிக்க அவகாசம் கோரப்பட்டதால், விசாரணையை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைப்பதாக, முதல் பெஞ்ச் தெரிவித்தது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (10 + 20)

  • Siva - Aruvankadu,இந்தியா

    திமுக ஆட்சியே பிச்சை எடுத்து வந்தது என்று ஒரு பாதிரி சொன்னது நீதிமன்றம் வரை செல்லவில்லை... நீதிபதிகள் செய்தி தாள்கள் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

    For Kind Attention of Honourable Court. The present MLAs of the ruling dispension, and of their allies have been told that they became MLAs because of the " பிச்சை " Of minorities. Indirectly this church father has called our honourable MLAs as beggars.

  • ஆரூர் ரங் -

    மாநிலம் முழுவதும் எல்லா பஸ்களிலும் இவ்வசதி ஏற்படுத்தும் செலவைவிட👎 குறைந்த விலையில் ஆளுக்கு ஒரு 3 சக்கர மின் வாகனம் கொடுத்து🙏 விடலாமே . ஒரு மாற்றுத்திறனாளி பஸ்சில் ஏற சுமார் 3-5 நிமிடங்கள் ஆவது ஆகும். போக்குவரத்து ஸ்தம்பிக்கும். கோர்ட் சிந்திக்கலாம்

    • Dhurvesh - TAMILANADU

      சரி ஆரூர் ரங் BJP க்கு TN தேர்தல் செலவு 500 கோடி என்று CT ரவி சொன்னான் , இதற்க்கு பதில் சொல்லு நேர்மை என்று சொல்லி கொண்டு இனி தெரியாத எல்லாம் திருட்டு கூட்டம் தான , போகிற போக்கை பார்த்தல் BJP கலகங்களை மிஞ்சி விடுவார்கள் போல ஊழலில்

  • duruvasar - indraprastham,இந்தியா

    நீதியரசரே பேப்பர் படியுங்கள். நேற்றுதான் ஒரு பாதிரியார் ஆளுங்கட்சி மற்றும் தோழமைகட்சி எம் எல் க்கள் சிறுபான்மை மக்கள் போட்ட பிச்சையால்தான் ஜெயித்தார்கள் என கூறியிருக்கிறார். இந்த உண்மை அமைச்சரவை உறுப்பினர்களை பார்த்தால் தெரியும்.

    • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

      அட நீங்க ஒண்ணு ? "நீதியரசர்கள் பதவியெல்லாமே, திமுக போட்ட பிச்சைன்னு" ஒரு திமுக MP சொன்னதையே கண்டுக்கலை இந்த நீதியரசர்கள், இதுக்கா கவலைப்படப்போறாங்க ??

    • enkeyem - sathy,இந்தியா

      அட இது நல்ல இருக்கே. நேற்று ஒரு பாதிரி இப்போதைய ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஜெயித்தது சிறுபான்மையினர் போட்ட பிச்சையினால்தான். என்று கர்ஜிக்கிறான். ஒரு தி மு க எம் பி நீதி அரசர் பதவிகள் எல்லாம் தி மு க போட்ட பிச்சை என்கிறார். அப்போ பிச்சைக்காரர்கள் போட்ட பிச்சைதான் நீதியரசர்களா? ஆளும் கட்சியர்களுக்கு இது கேவலமாகத் தெரியவில்லை?

  • s t rajan - chennai,இந்தியா

    தமிழகத்தில் பெரும்பாலான பணக்காரர்கள் அரசியல் வியாதிகள் தான். MC முதற்கொண்டு கோடீஸ்வரர்கள். ஸ்டாலினுக்கு எத்தனை வீடுகள், உதயநிதிக்கு எத்தனை வர்த்தக நிறுவனங்கள் என்பது உலகம் அறிந்ததே. நீதிமன்றம் அறியாததா ? விஞ்ஞான கொள்ளையர் என்று சர்க்காரியா கமிஷன் கூறியது..... யார்... என்று நீதிமன்றம் மறந்து விட்டதா ? கோடீஸ்வரனாக இல்லாவிட்டால் ஒரு MC கூட ஆகமுடியாது என்ற நிலையை நீதி மன்றம் மாற்ற முயலாமல் திணறுவது ஏன் ?

Advertisement