dinamalar telegram
Advertisement

26ல் எடியூரப்பா ராஜினாமா? கர்நாடக அரசியலில் பரபரப்பு!

Share
பெங்களூரு:கர்நாடக முதல்வர் எடியூரப்பா, வரும் 26ல் தன் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா, 78, தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அவர் ஆட்சி அமைத்தபோதே இரண்டு ஆண்டுகள் மட்டும் தான் உங்களுக்கு முதல்வர் பதவி என கட்சி தலைமை அறிவுறுத்தியதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர் முதல்வராக பொறுப்பேற்று வரும் 26ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன.

எனவே அவர் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து பெங்களூரில் எடியூரப்பா நேற்று கூறியதாவது:பா.ஜ.,வில் 75 வயது நிரம்பியவர்களுக்கு பதவி வழங்கப்படவில்லை. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோர் என் மீது சிறப்பு அக்கறை செலுத்திஅதிகாரம் வழங்கினர்.

வரும் 26ல், நான் முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. கட்சி மேலிடம் என்ன உத்தரவிடுகிறதோ, அதன்படி நடப்பேன். முதல்வர் பதவியில் இருந்து விலகுங்கள் என கூறியதும் விலகிவிடுவேன். கட்சி பணிக்கு திரும்பி, அடுத்த சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறச் செய்து, மீண்டும் பா.ஜ.,வை அதிகாரத்தில் அமர வைப்பேன்.இரண்டு மாதங்களுக்கு முன்பே ராஜினாமா செய்ய முடிவு செய்திருந்தேன். கட்சி மேலிடத்திடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்பதால் காத்திருந்தேன்.

அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என யாருடைய பெயரையும் பரிந்துரைக்க மாட்டேன். அதை கட்சி மேலிடம் தீர்மானிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.(பெங்களூருக்கு வராத பக்கம்)
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement