dinamalar telegram
Advertisement

லடாக்கில் மத்திய பல்கலை அமைச்சரவை ஒப்புதல்

Share
புதுடில்லி:புதிதாக உருவாக்கப்பட்டுள்ள லடாக் யூனியன் பிரதேசத்தில் மத்திய பல்கலை அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஜம்மு - காஷ்மீர், லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக 2019ல் பிரிக்கப்பட்டது. லடாக்கில் புதிய மத்திய பல்கலை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியுள்ளதாவது:லடாக்கின் கல்வி வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், அங்கு மத்திய பல்கலை அமைக்க அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய பல்கலை சட்டத்தில் திருத்தம் செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

உருக்கு துறையில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 6,322 கோடி ரூபாய் மதிப்புள்ள உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகை வழங்கவும் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது.இதன் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாய் புதிய முதலீடுகள் கிடைக்கும். புதிதாக 5.25 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement