Load Image
dinamalar telegram
Advertisement

6,000 பயணியர் ரயிலில் தவிப்பு

மும்பை:கனமழை காரணமாக மஹாராஷ்டிராவில் ரத்னகிரி மாவட்ட ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், கொங்கன் ரயில்வே தடத்தில் 6,000 பயணியர் ரயில்களில் சிக்கி தவிக்கின்றனர்.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களும் மழை வெள்ளத்தில் மூழ்கின.ரத்னகிரி மாவட்டத்தின் சிப்லன் - காமாத்தி ரயில் நிலையங்கள் இடையே உள்ள வசிஷ்டி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. ரயில் பாலத்தில் ஆற்று வெள்ளம் அபாய கட்டத்தை எட்டியது.

இதையடுத்து அவ்வழியே செல்லும் ஒன்பதுக்கும் மேற்பட்ட நீண்ட துார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக கொங்கன் ரயில் வழிதடத்தில் 6,000 பயணியர், ரயில்களில் ஆங்காங்கே சிக்கி உள்ளனர்.அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கொங்கன் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement