dinamalar telegram
Advertisement

விவசாயிகள் போராட்டம் ஜந்தர் மந்தருக்கு மாற்றம்

Share
Tamil News
புதுடில்லி:டில்லி சிங்குர் எல்லையில் இருந்து ஜந்தர் மந்தருக்கு தங்கள் போராட்ட களத்தை விவசாயிகள் மாற்றியுள்ளனர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள் டில்லி எல்லையில் ஓர் ஆண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.பிரச்னைக்கு தீர்வு காண விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 11 சுற்று பேச்சும் தோல்வியில் முடிந்தது.கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக போராட்டம் சற்று ஓய்ந்திருந்தது.

வைரஸ் பரவல் குறைந்துள்ள நிலையில் போராட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் சமீபத்தில் துவங்கியது. இதையடுத்து பார்லிமென்ட் முன் ஆர்ப்பாட்டம் நடத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் அனுமதி கோரினர். ஆனால் 'கொரோனா பரவல் ஏற்படும்' எனக் கூறி அனுமதி வழங்க போலீசார் மறுத்துவிட்டனர்.

இதையடுத்து டில்லி சிங்குர் எல்லையில் இருந்து டில்லி ஜந்தர் மந்தருக்கு போராட்ட களத்தை விவசாயிகள் நேற்று மாற்றினர். இஸ்ரேலை சேர்ந்த பெகாசஸ் நிறுவனத்தின் உளவு மென்பொருள் வாயிலாக எங்களை மத்திய அரசு வேவு பார்க்கிறது என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement