dinamalar telegram
Advertisement

பா.ஜ. - எம்.எல்.ஏ.க்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு

Share
புதுடில்லி:மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா காங்கிரஸ் தேசியவாத காங். கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநில சட்டசபை சமீபத்தில் கூடியபோது பா.ஜ. - எம்.எல்.ஏ. க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பா.ஜ. வை சேர்ந்த 12 எம்.எல்.ஏ. க்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு கூச்சல் எழுப்பினர்.அப்போது சபாநாயகரை அவர்கள் தரக்குறைவாக விமர்சித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட பா.ஜ. - எம்.எல்.ஏ. க்கள் 12 பேர் சட்ட சபை கூட்டங்களில் பங்கேற்க ஓராண்டுக்கு தடை விதிக்கப்பட்டது.இந்த நடவடிக்கையை எதிர்த்து பா.ஜ. - எம்.எல்.ஏ. க்கள் 12 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement