dinamalar telegram
Advertisement

மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, ஆபீசில்...ரெய்டு!

Share
Tamil News
அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம், அவர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள், உறவினர்களின் வீடுகள் என, தமிழகம் முழுதும், 26 இடங்களில், லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். தொடர்ந்து, 13 மணி நேரம் நடந்த சோதனையில், 25.56 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.


விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்த போது, அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சர்களாக இருந்த வேலுமணி, தங்கமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர், கரூர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் ஊழல் பட்டியல் தயாரிக்கப்பட்டு, கவர்னர் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் தரப்பட்டது.

சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்வர் வேட்பாளராக ஊர் ஊராக சென்ற ஸ்டாலின், 'நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், ஊழல் அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாயும்; இந்த ஸ்டாலின் விடமாட்டேன்; என்னை நம்புங்கள்' எனக்கூறி ஓட்டுக்கேட்டார்.

கந்தசாமி நியமனம்அதன்படி, ஆட்சிக்கு வந்ததும், முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி, சி.பி.ஐ.,யில் பணியாற்றி அனுபவம் பெற்ற, டி.ஜி.பி., ரேங்கில் உள்ள கந்தசாமி, லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக பணி அமர்த்தப்பட்டார்.அவரது தலைமையில் லஞ்ச ஒழிப்பு துறை வலுப்படுத்தப்பட்டது. சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக இருந்த, ஐ.ஜி., பவானீஸ்வரி; விருப்ப ஓய்வு கோரிய, டி.ஐ.ஜி., லட்சுமி மற்றும் பல ஆண்டுகளாக லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரிந்த, 100க்கும் மேற்பட்ட டி.எஸ்.பி.,க்கள் மாற்றப்பட்டு, அந்த துறைக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டது.

முதல்வர் ஸ்டாலினை, ஜூன், 26ல் கந்தசாமி சந்தித்தார். இருவரும் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசித்தனர். அதன்பின், அ.தி.மு.க., ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்களின் ஊழல்கள் குறித்த ஆதாரங்கள் திரட்டப்பட்டன.அதன் அடிப்படையில், 'டெண்டர்' முறைகேடு, பஸ் கொள்முதல் செய்ததில் ஊழல், உதிரி பாகங்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் சுருட்டல் என, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்தனர்.
போலீஸ் தயாரித்த ஊழல் பட்டியலில், முன்னாள் முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் வேலுமணி ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் உள்ளன.

அதிரடி சோதனைஇந்நிலையில், திடீரென நேற்று காலை, 6:30 மணி முதல், 200க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், பல்வேறு குழுக்களாக பிரிந்து, எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சென்னை, கரூர் வீடுகள், அவரது உறவினர்கள் மற்றும் உதவியாளர்களின் வீடுகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் என, 26 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், சாய் கிருபா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள விஜயபாஸ்கர் வீடு; மேற்கு மாம்பலம், கோகுலம் காலனி, ராமகிருஷ்ணா புரத்தில், 'டெடி இண்டியா' என்ற நிறுவனம்; பெருங்களத்துாரில், உதவியாளர் பாலசுப்பிரமணியன் வீடு; வில்லிவாக்கம், டவர் பிளாக் அடுக்குமாடி குடியிருப்பில், ரவிக்குமார் என்பவரின் வீட்டிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
கரூரில், சின்ன ஆண்டாங்கோவில் ரெயின்போ சாயப்பட்டறை, அட்டை பெட்டி நிறுவனம்; ஆண்டாங்கோவிலில் உள்ள விஜயபாஸ்கரின் தம்பி சேகர் வீடு; கரூர் மில்கேட்டில் உள்ள தறி பட்டறை, அவரது உதவியாளர்கள் கார்த்தி, ரமேஷ் வீடுகள்; க.பரமத்தியில் ரெயின்போ கல்குவாரியிலும் சோதனை நடந்தது. தொடர்ந்து, 13 மணி நேரம் சோதனை நடந்தது. சின்ன ஆண்டாங்கோவிலில் விஜயபாஸ்கர் வீடு பூட்டியிருப்பதால், அங்கு சோதனை நடக்கவில்லை.

விஜயபாஸ்கரின் வழக்கறிஞர் செல்வம் கூறுகையில், 'லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், விஜயபாஸ்கர் வீட்டில் சிங்கிள் பேப்பர் கூட சிக்கவில்லை. விஜயபாஸ்கர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை, சட்டப்படி நீதிமன்றத்தில் சந்திப்போம்' என்றார். இந்நிலையில், சோதனை குறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு: முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், மனைவி விஜயலட்சுமியின் வீடுகள்; அவர்கள் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் என, 26 இடங்களில் சோதனை நடந்தது. சோதனையில், 25.56 லட்சம் ரூபாய் ரொக்கம், சொத்து சார்ந்த முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்த முதலீட்டு ஆவணங்கள், நிறுவனங்களில் பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. விசாரணை தொடர்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பங்காளி சண்டை காரணமா?விஜயபாஸ்கரும், தற்போது மின்சாரத்துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியும் பங்காளிகள். ஜெ., தலைமையிலான ஆட்சியில், செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, தான்தோன்றிமலை ஒன்றிய செயலராக விஜயபாஸ்கர் இருந்தார். அப்போதே, இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. பின், செந்தில் பாலாஜியின் பதவி பறிக்கப்பட்டது. அவர், அ.ம.மு.க.,வுக்கு ஓட்டம் பிடித்தார்; பின், தி.மு.க.,வுக்கு தாவினார்.


செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். அவரது வீடு மற்றும் சகோதரர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு, இ.பி.எஸ்., முதல்வராக இருந்தபோது, போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கரே காரணம் என, செந்தில் பாலாஜி தரப்பினர் குற்றம் சாட்டினர். தற்போது செந்தில் பாலாஜி கை ஓங்கி இருப்பதால், அவரது முயற்சியால், பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்த சோதனை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.- நமது நிருபர் குழு -

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (28 + 16)

 • jagan - Chennai,இலங்கை

  சுத்த பழி வாங்கும் நடவடிக்கை. அதிகார துஷ்ப்ரயோகம் தீயமுகவிடம் எதிர் பார்த்தது தான்

 • chinnakaruppan - natham,இந்தியா

  பழிதீர்ப்பதில் திமுக கில்லாடி.டெலஸ்கோப் வச்சி பார்த்தாலும் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு ஊழல் செய்வதில் திமுக கில்லாடி.

 • R VENKATARAMANAN - Chennai,இந்தியா

  ஐயா, அரசியலுக்கு வரவன் திருடத்திட்டான் வருகிறான் . திருடவில்லை என்றால் அரசியலுக்கு லாயக்கு இல்லாதவன் . இதை ஏற்படுத்தியது D M K தான் அவர்கள் காட்டிய வழியில் அடுத்தவர்கள் சென்கின்றனர் . இதற்கு ஒன்று செய்யலாம். ஒருவர் வீடு குடிவரும்பொது வீட்டின் உரிமைதாரர் அட்வான்ஸ் தொகை வாங்குகிறார். வீடு காலி செய்யும் பொது வாடகை பாக்கி, மின்கட்டணம் பாக்கி, பைப்பின்ட் சார்ஜ், வேறுஏதாகிலும் இருந்தால் அவைகளுக்கான மொத்த சிலவு தொகையையும் கழித்து மீதி தொகையை ஒப்படைப்பார் . அதுபோல அரசியலில் ஒரு அபெச்சகராக போட்டியிடும் நபர் தன கும்ப வம்சாவளி அனைவர் பெயரிலும் உள்ள அசையும் அசையா சொத்துக்கள் விபரத்தை எழுத்து மூலமாக கொடுக்கவேண்டும். அவர் பதவி விலகும் போது மீண்டும் இந்த விபரங்களை பெற்று கூடுதலாக உள்ள வரை சர்க்கார் வசை படுத்திக்கொள்ளவேண்டும். இதை முதலில் பாலிமெண்டில் ஒரு சட்டமாக இயற்றவேண்டும். மற்றும் கிரிமினல் கேஸ் களில் ஈடு பட்டவர்கள் அல்லது தண்டனை பெற்றவர்கள் நிரந்தமாக போட்டியிட தடைசெய்யவேண்டும்.

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

   இதை ஏற்படுத்தியது D M K தான் :: அப்போ உங்களுக்கு சுயபுத்தி ஒரு % இல்லையா இதை சொல்ல வெட்க படணும் , ஒருத்தன் COPY அடிச்சி பாஸ் ஆனான் ஆதாலால் நானும் என்று சொல்வதை போல / சரி உங்கள் நேர்மை கட்சிக்கு 500 கோடி இல்லை SV சேகர் சொன்ன ஆளுக்கு 13 கோடி எப்படி சாத்தியம் யார் சம்பாத்தியம் எப்படி TRF சொல்லேன் யோக்கிய சிகாமணியே

 • Ramanujan - Nagercoil,இந்தியா

  செந்தில் பாலாஜி புனிதமாகி விட்டார். சசிகலா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்க வில்லை. கொடநாடு எஸ்டேட் எப்படி வாங்கினார்கள்? போயஸ் கார்டனில் 24 கிரௌண்ட் என்ன விலை? யார் ரெயிட் விடுவது? என்ன செய்தார்கள்? இந்த நாடு அப்படிதான். உருப்பட வழியே இல்லை. போய் உங்கள் வேலையை பாருங்கள்.

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

   மஹாராஸ்ற்ற RAANE இப்போ மதிய மந்திரி , SVENDHU மீது ஊழல் புகார் சொன்ன யோக்கிய சிகாமணி மோடி இப்போ இவர்கள் எல்லாம் மந்திரிகள் பீஜேபி கலிடம் அப்புறம் என்ன

 • Balagan Krishnan - bettystown,அயர்லாந்து

  Kamaraj correctly commed that both ADMK and DMK are "orai kuttaiyil ooriya mattaikal".

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

   என்ன பண்ணுவது TN தேர்தல் BJP 500 கோடி செலவாம் இது யார் பணம் இது ஊழல் இல்லையா அப்புறம் இவர் மட்டும் என்ன

  • Dhurvesh - TAMILANADU ,இந்தியா

   இதற்க்கு எவனும் பதில் இல்லை பாருங்கள் இவர்கள் ஊழலில் இன்னும் சில வருடங்கள் கழகங்கள் வெட்க படும் அளவுக்கு வரப்போகுது

Advertisement