dinamalar telegram
Advertisement

அரசுக்கு எதிராக போராட்டம் : அ.தி.மு.க.,வில் வலியுறுத்தல்

Share
Tamil News
சென்னை:அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று மதியம் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள், சென்னை மற்றும் புறநகர் மாவட்ட செயலர்கள், தலைமை நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், 'தி.மு.க., அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.'பெட்ரோல், டீசல் விலை ஏறியபடி உள்ளது. தி.மு.க., அரசின் தோல்விகளை, மக்களிடம் எடுத்து சொல்லும் வகையில், போராட்டங்கள் நடத்த வேண்டும்' என்று வலியுறுத்தினர்.முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி போன்றோர், 'அ.தி.மு.க.,வுக்கு மாற்று பா.ஜ.,' என, அக்கட்சி நிர்வாகிகள் சிலர் பேசி வருவதை சுட்டிக்காட்டி, அக்கட்சி தலைமையிடம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.மேலும், 'பா.ஜ., நிர்வாகிகள் அவ்வாறு பேசினால், நாம் பதிலடி தர வேண்டி இருக்கும் என்பதை தெரியப்படுத்துங்கள். நம் கட்சியில் இருந்து வெளியேறுபவர்கள், பா.ஜ., உடன் சேர்ந்ததால் தான், கட்சி தோல்வி அடைந்தது எனக் கூறி வருகின்றனர்.

'எனவே, பா.ஜ., நிர்வாகிகள், நமக்கு எதிராக பேசினால், நாம் அமைதியாக இருக்க கூடாது. அதற்கு பதில் அளிக்க வேண்டும். அப்போது தான் நாம் கட்சியை வளர்க்க முடியும். தி.மு.க.,வுக்கு எதிராக, அறிக்கை வெளியிட்டு கொண்டிருக்காமல், போராட்டத்தில் ஈடுபட வேண்டும்' என, வலியுறுத்தி உள்ளனர்.கட்சி அமைப்பு செயலர் ஜெ.சி.டி.பிரபாகர், 'தி.மு.க., அலுவலகத்துக்கு, அண்ணாதுரை பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்துக்கு, எம்.ஜி.ஆர்., பெயர் சூட்ட வேண்டும். மேலே உள்ள அரங்குக்கு, ஜெயலலிதா பெயர், தரை தளத்தில் உள்ள அலுவலகத்திற்கு, ஜானகி பெயர் சூட்ட வேண்டும்' எனக் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (12)

 • Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா

  பத்து வருடங்களாக ஆட்சி யில் இருந்த போது ஒரு ஆணியும் புடுங்கவில்லை. இவர்களது அறிவற்ற ஆட்சி முறையால் தமிழக அரசுக்கு ரூ.34,000 கோடி இழப்பு என்று பாஜக அரசின் குழ் இயங்கும் சிஏஜி அறிக்கை சொல்லி விட்டது. அதற்கு எந்த விளக்கமும் இவர்களிடமிருந்து இதுவரை இல்லை. இவர்களின் நிர்வாக திறன் இல்லாததால் அரசு கேபிள் டிவியில் ரூ.2000 கோடி நஷ்டம் என்று அதே ஆய்வறிக்கை கூறுகிறது. இதற்கும் இந்த இரட்டை தலைமை பதிலே சொல்ல வில்லை.

 • Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Why after raid in ex minister house? I always believe that there is tactical understanding between both Dravidian parties for looting state

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  அபாயகரமான சூழ்நிலை' அரசியல் ரீதியில் உருவாகும்..ஓ பன்னீர்செல்வம் போதி தர்மரே எனக்கு தெரிந்து அபாயகரமான சூழ்நிலை இதுவரை பார்த்ததில்லை ப்ளீஸ் கொஞ்சம் செய்து காட்டுங்கள் நாங்கள் பார்க்கிறோம் அப்படியே இந்த அபாயகரமான சூழ்நிலை சசிகலாவிடம் கொஞ்சம் காட்டுங்கள் , எல்லாம் திரு நீங்கள் ஆட்சியில் இருக்கும்போதே korrnaa விஜய பாஸ்கர் வீட்டில் குட்கா விசயத்திற்கு RAID வந்தே அப்போ என் பொங்கலை

 • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

  சாக்கடைக்கும் பூக்கடைக்கும் விளம்பரம் தேவையில்லை என்பார்கள், தமிழர்களின் தனித்துவத்தை இழந்தே சங்கிகளின் அடிமைகளாக ஆட்சியில் தொடர்ந்த அதிமுக வினர்கள், ஊழலே செய்தொழிலாகவும், காசே பிரதானமென வாழ்ந்த வரலாறை , தமிழகமே அறிந்துள்ள போது , தற்போதைய திமுக அரசின் நடவடிக்கைகளை தமிழர்களனைவரும் வரவேற்பதே உண்மையாகும்,

 • ஷண்முக பிரியன் - AMBATTUR,இந்தியா

  இதுவரைக்கும் எதுக்கும் வாய் திறக்கலை ஒருத்தனை நோண்ட ஆரமிச்ச உடனே கதறுறீங்க ஒவ்வொவொருத்தர உள்ள போகவேண்டியதுதான் எவ்வளவு ஆட்டையை போட்டிங்க, கொஞ்ச நஞ்சமா???

Advertisement