dinamalar telegram
Advertisement

வனப் பரப்பை அதிகரிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

Share
Tamil News
சென்னை : ''தமிழகத்தின் வனப் பரப்பை, 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில், பொது மக்கள் மற்றும் இளைய தலைமுறையினரின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

ஆய்வு



சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் மற்றும் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம், தலைமை செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் முதல்வர் கூறியதாவது:மரம் நடுதல் திட்டத்தை தீவிரப்படுத்தி, தமிழகத்தின் வனப் பரப்பை 33 சதவீதமாக உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். மனிதர்கள், வன விலங்குகளுக்கு இடையிலான மோதல்களை கட்டுப்படுத்த, உரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.வனப் பாதுகாப்பை பொறுத்தவரை, நீலகிரி உயிர்க்கோள் காப்பகம், மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பகம், அகஸ்தியர் மலை உயிர்க்கோள் காப்பகம் ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும். மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயம், புலிகள் சரணாலயம், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றில், தற்போதுள்ள கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும்.

நடவடிக்கை



தொழில் துறையினருக்கு, சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில், வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். இளைய தலைமுறையினரை, சுற்றுச்சூழல் மேம்படுத்தும் நடவடிக்கைகளில், அதிக அளவு ஈடுபடுத்த வேண்டும்.இவ்வாறு முதல்வர் கூறினார்.கூட்டத்தில், அமைச்சர்கள் ராமச்சந்திரன், மெய்யநாதன், தலைமைச்செயலர் இறையன்பு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அசோக் உபரேதி ஆகியோர் பங்கேற்றனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (11)

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    வனத்தைப் பெருக்குங்க. அதே சமயம் வனத்தை ஆக்கிரமிக்கரவங்க யாராயிருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுங்க.

  • Marai Nayagan - Chennai,இந்தியா

    ஒரு காலத்தில் சென்னையில் இருந்த நீர் நிலைகளை காடுகளை நினைவிடங்களாகவும் பேருந்து நிலையங்களாக மற்றும் ஆக்கிரமிப்பில் வைத்தது திராவிட கட்சிகள் அதில் முக்கியமாக திமுக. இப்பித்தாவது புத்தி வந்ததே ....ஏமாற்றாமல் ஏதாவது செய்யவும்

  • Marai Nayagan - Chennai,இந்தியா

    கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் மாநில நெடுசாலை ஒரு காலத்தில் மரங்களால் சூழ்ந்து நிழலைகள் இருந்தது. ஆனால் இன்று பொட்டல் வெளியாக உள்ளது. வளர்ச்சி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் பிசினெஸ் திமுகவின் சாதனை

  • duruvasar - indraprastham,இந்தியா

    வாஆக்குறிதி பரப்பை விரிவாக்ககுவீங்ககளா? ஏனென்றால் அதற்க்கு அறிவிப்பு மற்றும் போதும். எவ்வளவு வேண்டுமானாலும் அளிக்கலாம். முடிவில்லாதது. மக்களும் விடியல் மகிழ்சியில் திளைப்பார்கள்.

  • VARADHARAJANAYATHURA - Salem,இந்தியா

    விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் முதலைகள் கபளீகரம் செய்யாமல் தடுக்கமுயற்சியுங்கள்.விளைநிலங்களின் பரப்பளவை அதிகரிக்க வழி தேடுங்கள்

Advertisement