dinamalar telegram
Advertisement

ஏழைகள், பணக்காரர்களுக்கு தனித்தனி நீதி இருக்க முடியாது

Share
Tamil News
புதுடில்லி : 'இந்தியாவில் ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும் எனத் தனித்தனியாக நீதி பரிபாலன முறை இருக்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துஉள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் ராம்பாய் சிங். இவரின் கணவர் கோவிந்த் சிங்.

மேல்முறையீடு



இரண்டு ஆண்டுக்கு முன் காங்கிரஸ் பிரமுகர் தேவேந்திர சவுரேஸ்யா கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த கோவிந்த் சிங், சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவருக்கு மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் 'ஜாமின்' வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ம.பி., அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.கோவிந்த் சிங்கின் ஜாமினை நீதிபதிகள் சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு ரத்து செய்து நேற்று உத்தரவிட்டதாவது: நாட்டின் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பாக இருப்பது சுதந்திரமான, பாரபட்சமில்லாத நீதித்துறை தான்.

அரசியல் அழுத்தங்கள், தாக்கங்களில் இருந்து நீதித்துறை தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டும்.இந்தியாவில் இருவிதமான நீதி பரிபாலனமுறை இருக்க முடியாது. பணக்காரர்களுக்கான, அரசியல் அதிகாரம் கொண்டவர்களுக்கான நீதி பரிபாலன முறையும், ஏழ்மையான, எந்தவிதமான பண வசதியும் இல்லாதவர்களுக்கு தனியாக நீதி பரிபாலன முறையும் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.

நம்பிக்கை



மாவட்ட நீதிமன்றம் தான் மக்களின் முதல் நம்பிக்கை. நீதித்துறையில் மக்களின் நம்பிக்கை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், மாவட்ட நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். நியாயத்துக்காக நீதிபதிகள் குரல் கொடுத்து எழுந்து நிற்கும்போது, அவர்கள் இலக்காக்கப்படுகிறார்கள். நீதித்துறையின் புனிதத் தன்மையைப் பாதுகாக்க மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தவறிவிட்டது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (19)

  • suresh kumar - Salmiyah,குவைத்

    ஏழைகள் கோர்ட்டுக்கு போகவே முடியாது. எந்த ஒரு வழக்கிற்கும், எத்தனை வாயிதாக்கள் அத்தனை முறையும் கோர்ட்டுக்கு போனால் வருமானத்திற்கு என்ன வழி? குடும்பத்தை எப்படி சமாளிப்பது?

  • அப்புசாமி -

    ஏழைகள், பணக்காரர்கள் எல்லோருக்கும் ஒரே ந்திதாஞுவர் ஆனர். ஆனா, தீர்ப்பு மட்டும் தான் வேற வேறயா இருக்கும் யுவர் ஆனர்.

  • J.Isaac - bangalore,இந்தியா

    நடைமுறையில் ஆளுகிறவர்களுக்கு, ,அரசியல்வாதிகளுக்கு,பணக்காரர்களுக்கு ஒரு நீதி,ஏழை பாமர மக்களுக்கு நீதி உள்ளது

  • Sridhar - Jakarta,இந்தோனேசியா

    supreme court வக்கீல்களின் ஒருமணிநேர fees எவ்வளவு என்று தெரியுமா Milords? ஒ, நீங்க ஏழைகளுக்கு நீதி என்ற ரீதியில் பேசவில்லையா? நீதி என்பது பணக்காரர்களுக்கு மட்டும்தான் இருக்கவேண்டும் என்று இவ்வளவு வெளிப்படையாக உங்களை விட்டால் யாராலும் இதுபோல சொல்லமுடியாது வரவர நீதிபதிகள் வரவர ராவுக்கே சவால்விடுவார்கள் போலருக்கே

  • Sadagopan Varadhachari - Hosur,இந்தியா

    குற்றங்கள் நிரூபித்தும் சல்மான் கான் ஒரு 5 நிமிடம் கூட சிறை தண்டனை அனுபவித்ததாக தெரியவில்லையே

    • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

      உண்மை நீதியரசர் அவர்களே விஜய் வாங்கிய car சச்சின் வாங்கியபோது வரி விலக்கு இன்னும் BJP ஆட்களுக்கு எல்லாம் விதி விலக்கு அனால் விஜய் க்கு தெரு விளக்கு என்ன பின்ன

    • elakkumanan - Naifaru,மாலத்தீவு

      அந்த கார், ஷூமாக்கரின் அன்பளிப்பு. சோசப்பு காசு கொடுத்து வாங்கினது இந்த கார். அடுத்து, சச்சின் இந்திய தேசத்தின் விளையாட்டு வீரன். அவரின் சாதனைகள், இந்தியாவின் பெயரில் பதியப்பட்டுள்ளது. ஊர் பய காசை வாங்கி மினுக்கும் கூத்து கோஷ்டி, வரி கட்டட்டுமே. பழைய சோறும் வெங்காயமும் தான் சாப்பிடுறாரோ. அந்த காருக்கு வரி தள்ளுபடி கொடுத்தது கான் கிராஸ். இதே மாதிரி, ஹம்மர் கார் வாங்கி, இன்னொரு கோஷ்டி மன்னாப்பு கடுதாசி , அபராதம் கட்டுனதெல்லாம் தெரியுமா?

Advertisement