dinamalar telegram
Advertisement

குடும்பத் தலைவியருக்கு உரிமை தொகை எப்போது?

Share
சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:குடும்பத் தலைவியர், பொருளாதாரத்திற்காக கணவனை சார்ந்திருக்கும் சூழ்நிலையே நிலவுகிறது.

தங்களது தனிப்பட்ட ஆர்வம், கனவுகளுக்காக செலவு செய்ய முடியாத நிலையில் தான் பெரும்பான்மையான பெண்கள் இருக்கின்றனர்.'இல்லத்தரசிகளுக்கு ஊதியம்' என்ற, மய்யத்தின் திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பினை பார்த்து, பிற அரசியல் கட்சிகளும் இதை தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் சேர்த்தன. தமிழகத்தில் துவங்கி, அசாம் சட்டசபை தேர்தல் வரை இது எதிரொலித்தது.

தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில், 'குடும்பத் தலைவியருக்கு மாதம் ௧,௦௦௦ ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது. இன்றையபணவீக்கத்துடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைந்த தொகை. குடும்பத் தலைவியருக்கு மாதந்தோறும் உரிமை தொகை திட்டம், எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது பற்றிய அறிவிப்புகள், கவர்னர் உரையில் இடம்பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டன.

ஆட்சியில் அமர்ந்து 75 நாட்களாகியும் இந்த அறிவிப்பு வரவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. சமூக நலத் திட்டங்களில் இந்தியாவிற்கே முன்னோடியாகத் திகழும் தமிழகம், குடும்பத்தலைவியருக்கான உரிமை தொகை விஷயத்தில் சுணக்கம் காட்டுவது ஏற்புடையதல்ல. இதற்கான அறிவிப்புகளை, பட்ஜெட் கூட்டத்தொடரில் அரசு வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

    " இன்றைய ஸ்பெஷல் " - எழுபத்தைந்து நாளாச்சு - ஏன் பெண்களுக்கு உதவித் தொகை கொடுக்கலை ?

Advertisement