dinamalar telegram
Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

Share
Tamil News
'வழக்கமாக மனு எல்லாம் கொடுக்க மாட்டீர்களே; நேரடியாக போராட்ட களத்தில் தானே குதிப்பீர்கள்... தமிழகத்தில், தி.மு.க., ஆட்சியில் உள்ளதால், போராட்டத்தை மறந்து விட்டீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: மத்திய நிதியமைச்சர், பா.ஜ.,வைச் சேர்ந்த, நிர்மலா சீதாராமனை சந்தித்து, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிடக் கோரி மனு அளித்தேன்.


'உங்களைப் போன்ற ஞானசூனியங்கள் எப்படித் தான், மத்திய அமைச்சராக இருந்ததோ என, ஆச்சர்யப்பட வைக்கும் வகையில், பா.ஜ., அதிருப்தியாளரான முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா அறிக்கை:
பொதுமக்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களை ஒட்டு கேட்க முடியும் என்றால், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை ஏன் திருத்த முடியாது... எனவே, உடனடியாக பழைய, பேப்பர் ஓட்டு முறைக்கு மாற வேண்டும்

.
'நீங்கள் விரும்பும் அமைப்பு, தமிழகத்தில் உருவாக வாய்ப்பே இல்லை. எனவே, புத்திசாலி மாதிரி காட்டிக் கொள்ள, தொடர்ந்து இதுபோல பேசித் தான் ஆக வேண்டும்...' என, கூறத் துாண்டும் வகையில், நடிகர் கமல் ஹாசனின், மக்கள் நீதி மய்யத்தின் அரசியல் ஆலோசகர் பழ.கருப்பையா பேட்டி:
திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக, மாநில உரிமை, மொழியுரிமை, ஹிந்துத்துவ எதிர்ப்புகளை வலியுறுத்தும் ஓர் அமைப்பு இங்கே கட்டப்பட வேண்டும் என்பது தான் என் கருத்து. இன்றைய காலகட்டத்தில், கமல் ஹாசனால் அதை வலிமையான கட்டமைப்பாக செய்ய முடியாவிட்டாலும், நாளை அது காலத்தின் கட்டாயமாக இருக்கும்.


'அது அவங்க பாடு... உங்களுக்கு என்ன... இரண்டு கம்யூ.,க்களையும் உங்களால் ஒன்றுபடுத்த முடியுமா... அதை செய்யுங்க முதலில்...' என, பதிலளிக்கத் தோன்றும் வகையில், தமிழக மார்க்சிஸ்ட் பிரமுகர் அருணன் அறிக்கை:
'பெருந்தன்மையோடு கட்சியை சசிகலா விட்டுத்தர வேண்டும்' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியுள்ளார். அவர் சொல்வதுபடி பார்த்தால், அ.தி.மு.க., சசிகலாவுக்கு தான் சொந்தமா... அவராக பார்த்து விட்டுக் கொடுத்தால் தான் உண்டா... இ.பி.எஸ்., நிலைமை இப்படிஆகிடுச்சே!'முதலில் கேரளாவை விட்டு அந்த நிறுவனம் வெளியேறியது ஏன் என, உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்...' என, சொல்லத் தோன்றும்வகையில், தமிழக பா.ஜ., பொருளாளர் சேகர் அறிக்கை:
தொழில் புரிய உகந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவதே லட்சியம்- என்கிறார், தமிழக முதல்வர் ஸ்டாலின். அப்படியெனில், கேரளாவின் 'கிட்டெக்ஸ்' நிறுவனம், தமிழகத்திற்கு வராமல், தெலுங்கானாவுக்கு சென்றது ஏன்?
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement