dinamalar telegram
Advertisement

கவலையில் சச்சின் பைலட்!

Share
Tamil News

கவலையில் சச்சின் பைலட்!



'பா.ஜ.,வுக்கு தாவியிருந்தாலும் மத்திய அமைச்சர் பதவி கிடைத்திருக்கும். இப்போது எந்த பதவியும் இல்லாமல், ராஜஸ்தானுக்குள்ளேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டுகிறோம்' என, அந்த மாநில காங்கிரஸ் மூத்த தலைவரான சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் புலம்புகின்றனர். ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் கெலாட்டுடன் மோதல் போக்கை பின்பற்றினார். கடந்தாண்டு தன் ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ., வில் இணைய திட்டமிட்டார். இதனால் இவரிடமிருந்து துணை முதல்வர் பதவி, மாநில காங்., தலைவர் பதவி பறிக்கப்பட்டது.


கடைசி நேரத்தில் ராகுலும், பிரியங்காவும் சமரசம் செய்ததால், கட்சி தாவும் முடிவை கைவிட்டார். சச்சினுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பதவிகள் தரப்படும் என, உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டு கடந்த பின்னும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சச்சின் பைலட்டும், அவரது ஆதரவாளர்களும் அசோக் கெலாட்டால் தொடர்ந்து ஓரம் கட்டப்படுகின்றனர். 'காங்கிரசிலிருந்து பா.ஜ.,வுக்கு தாவிய மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு அமைச்சர் பதவி கிடைத்து விட்டது. நாமும் பா.ஜ.,வுக்கு போயிருந்தால் ராஜ வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்' என, சச்சின் பைலட்டின் ஆதரவாளர்கள் கவலைப்படுகின்றனர்.

சச்சின் பைலட்டோ, ஆதரவாளர்களை எப்படி ஆறுதல் படுத்துவது என தெரியாமல் பேந்த பேந்த விழிக்கிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement