dinamalar telegram
Advertisement

ஏன் கொக்கி போடுறார்?

Share
Tamil News

ஏன் 'கொக்கி' போடுறார்?



தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருநெல்வேலியில் சமீபத்தில் நடந்தது.பின் அக்கட்சி தலைவர் ஜான்பாண்டியன், நிருபர்களிடம் கூறுகையில், 'சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டேன். அ.தி.மு.க.,வுடன் உறவு உள்ளது; ஆனால் கூட்டணியில் இல்லை. பா.ஜ., உடன் கூட்டணியில் தொடர்கிறோம். இதே இரட்டை தலைமை நீடித்தால் அ.தி.மு.க., அழிவை சந்திக்கும்' என்றார்.
அங்கிருந்த மூத்த நிருபர் ஒருவர், 'அ.தி.மு.க.,வால் தோற்றேன் என்கிறார்... அப்புறம் அக்கட்சியுடன் என்ன உறவு இருக்குன்னு 'கொக்கி' போடுறார்...' என்றதும் அருகிலிருந்தவர், 'வரும் தேர்தலில் யாரும் கூட்டணியில் சேர்த்து கொள்ளவில்லை என்றால், திரும்பவும் அ.தி.மு.க., கதவை தட்டணுமே அதுக்கு தான்...' என்றதும், சுற்றியிருந்தோர் அதை

ஆமோதித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    இவர் பேச்செல்லாம் ஒரு கணக்கு

Advertisement