dinamalar telegram
Advertisement

மழை வெள்ளம் புகுந்து 500 ஏக்கர் மலை காய்கறி தோட்டம் பாதிப்பு...

Share
Tamil News
ஊட்டி: நீலகிரியில் நேற்று மாலை நிலவரப்படி, பந்தலூர், 87 மி.மீ., மழை பெய்தது. சராசரி, 29. 74. மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில், 20 மி.மீ., முதல் 30 மி.மீ., வரை மழை பதிவாகியுள்ளது.
குருத்துகுளி நீரோடையில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. நீரோடை வழித்தட ஆக்கிரமிப்பு காரணமாக, மழை வெள்ளம் மலை காய்கறி தோட்டத்தில் புகுந்தது. கோழி கரை, எம். பாலாடா, கல்லக் கொரை ஹாடா, மணலாடா பகுதிகளில் பயிரிட்ட பீட்ரூட், கேரட், உருளை கிழங்கு, முட்டைகோஸ் உள்ளிட்ட மலை காய்கறி தோட்டத்தில் வெள்ள நீர் புகுந்ததில், 500 ஏக்கர் அளவு மலை காய்கறி தோட்டம் பாதிக்கப்பட்டது. எம். பாலாடா பஜார் பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. மழை தொடர்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

    மேலும் செய்திகள் :

Advertisement