dinamalar telegram
Advertisement

மங்களூரு காங்., கூட்டம் ரத்து

Share
மங்களூரு:காங்கிரஸ் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னாண்டஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், மங்களூரில் நடக்கவிருந்த, காங்., தலைவர்கள் கூட்டம் ரத்தாகி உள்ளது.

தட்சிண கன்னடா மங்களூரில், மாநில காங்., பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தலைமையில், இன்று கூட்டம் நடக்கவிருந்தது.இக்கூட்டத்தில் ஷிவமொகா, சிக்கமகளூரு, ஹாசன், உடுப்பி, தட்சிண கன்னட மாவட்டங்களின் தலைவர்கள் பங்கேற்கவிருந்தனர். மாநில காங்., தலைவர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் கூட, பங்கேற்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் மூத்த தலைவர் ஆஸ்கர் பெர்னான்டஸ், வீட்டில் தவறி விழுந்து காயமடைந்து, மங்களூரின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இதனால், இன்று நடக்கவிருந்த கூட்டம் ரத்தாகியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement