Load Image
dinamalar telegram
Advertisement

பெங்., மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்

பெங்களூரு:பெங்களூரின் விக்டோரியா, சக்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கொரோனா இரண்டாவது அலையில், ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்காமலும், ஆக்சிஜன் படுக்கை வசதிகள் இல்லாமலும் உயிரிழந்தனர்.பாதிப்பின் விளைவாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், விக்டோரியா மருத்துவமனை மற்றும் சக்ரா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையிலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

நிலையங்களின் துவக்க விழா நடந்தது. ஒவ்வொரு நிலையமும், ஒரு நிமிடத்துக்கு 400 லிட்டர் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதுடன், சிலிண்டர்களிலும் அடைக்கப்படுகிறது. மருத்துவ மனை படுக்கைகளுக்கும், நோயாளிகளின் தேவைக்கும் ஆக்சிஜன் வழங்குவது என இரண்டு பயன்பாடுகளுக்கும் இந்த உற்பத்தி நிலையங்கள் பயன்படுகிறது.

வீடியோ கான்பரன்சிங் மூலமாக நிலையங்களை துவக்கி வைத்து முதல்வர் எடியூரப்பா கூறியதாவது:பொது மற்றும் தனியார் நிறுவன பங்களிப்புடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கேப்ஜெமினி நிறுவனத்தின் சார்பில், 50 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளனர். மருத்துவ கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.இவ்வாறு கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement